முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / எனக்கு நடிக்க பயமாக இருந்தது.. நடிகை சமந்தா உருக்கம்.!

எனக்கு நடிக்க பயமாக இருந்தது.. நடிகை சமந்தா உருக்கம்.!

நடிகை சமந்தா

நடிகை சமந்தா

Samantha feeling | சாகுந்தலம் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், நடிகை சமந்தா படத்தின் தனது கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒரு மனுசியாக, நடிகையாக 3 ஆண்டுகளாக எனது முன்னேற்றத்திற்கு காரணம் இந்த பயம்தான் என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் சமீபத்தில் தசை அலற்சி நோயில் சிக்கி சிகிச்சை பெற்று படிப்படியாக குணமடைந்து வருகிறார். இந்த நிலையில் யசோதா திரைப்படம் வெற்றியடைந்ததற்கு பிறகு சாகுந்தலம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து பேசிய நடிகை சமந்தா, இயக்குனர் சாகுந்தலம் படத்தின் கதையை சொன்னபோது என்னால் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டேன். காரணம் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு மிகவும் பயமாக இருந்தது. நான் சகுந்தலை போல இருக்க மாட்டேன். எனக்குள் அந்த தேஜஸ், கம்பீரம் இருக்காது என நினைத்தேன். அதன் பிறகு வற்புறுத்தி நடிக்க வைத்தனர். தற்போது எனது கதாபாத்திரம் சிறப்பாக வந்துள்ளது என தெரிவித்தார்.

top videos

    மேலும், ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க முடியாது என எனக்குள் பயம் ஏற்பட்டால், அந்த கதாபாத்திரத்தில் நடித்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்துகொள்வேன். பயத்தை தாண்டி செல்ல முயற்சி செய்கிறேன். என் எண்ணங்கள், வாழ்க்கை முறை எல்லாவற்றிலும் இதைத்தான் அனுசரிக்கிறேன். ஒரு மனுசியாக, நடிகையாக மூன்று ஆண்டுகளாக எனது முன்னேற்றத்திற்கு காரணம் இந்த பயம்தான் என தெரிவித்தார்.

    First published:

    Tags: Actress Samantha, Samantha