முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ரகு இப்போது இருந்திருந்தால்... - நினைவுநாளில் ரகுவரன் குறித்து ரோகினி உருக்கம்

ரகு இப்போது இருந்திருந்தால்... - நினைவுநாளில் ரகுவரன் குறித்து ரோகினி உருக்கம்

ரகுவரன்

ரகுவரன்

அவர் இறந்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஆன நிலையில் அவரது நடிப்பில் தங்களுக்கு பிடித்த கதாப்பாத்திரங்கள் குறித்து ரசிகர்கள் பதிவிட்டுவருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பயமுறுத்தும் வில்லனாக இருந்தாலும் சரி, சாஃப்டான குடும்பத்தலைவன் வேடமாக இருந்தாலும் சரி தனக்கென தனி பாணி நடிப்பின் மூலம் முத்திரை பதித்தவர் ரகுவரன். கோலிவுட் முதல் பாலிவுட் வரை வில்லத்தனமான வேடங்கள் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்றிருக்கிறார். கடந்த 2008 ஆம் ஆண்டு இதே நாளில் உடல் நலக் குறைவால் மரணமடைந்தார்.

அவர் வில்லனாக நடித்த பாட்ஷா, முதல்வன் உள்ளிட்ட படங்களாக இருந்தாலும் சரி குணச்சித்திர வேடங்களில் கலக்கிய லவ் டுடே முகவரி போன்ற படங்களாக இருந்தாலும் சரி அவரைத் தவிர்த்து வேறு நடிகர்களை நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது. அந்த அளவுக்கு உயிர்ப்புடன் அந்த கதாப்பாத்திரங்களை கையாண்டிருப்பார்.

அவர் இறந்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஆன நிலையில் அவரது நடிப்பில் தங்களுக்கு பிடித்த கதாப்பாத்திரங்கள் குறித்து ரசிகர்கள் பதிவிட்டுவருகின்றனர். கடைசியாக தனுஷுடன் இணைந்து யாரடி நீ மோகினி படத்தில் நடித்திருந்தார். இருப்பினும் அவர் முன்னதாக நடித்திருந்த அடடா என்ன அழகு என்ற படம் தாமதாக அவர் மறைவுக்கு பிறகு வெளியான கடைசிப்படமாக அமைந்தது.

இந்த நிலையில் அவரது முன்னாள் மனைவி ரோகினி ரகுவரன் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “மார்ச் 19, 2008 ஒரு சாதாரண நாளாகத்தான் தொடங்கியது. ஆனால் எனக்கும் ரிஷிக்கும் எல்லாவற்றையும் அது மாற்றியது. ரகு இப்போது இருந்திருந்தால், சினிமாவின் இந்த காலகட்டத்தை மிகவும் நேசித்திருப்பார்; ஒரு நடிகராகவும் அவர் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Actor Raghuvaran