தமிழ், தெலுங்கு, கண்ணட படங்களில் முன்னணி இளம் நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா. தற்போது இந்தி திரையுலகான பாலிவுட்டிலும் தடம் பதித்து நேஷன்ல் கிரஷ் என அனைவராலும் செல்லமாக அழைக்கப்படுகிறார். இந்நிலையில், நடிகை ராஷ்மிகா தனது பெற்றோர் குறித்து மனம் திறந்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். Harper’s Bazaar என்ற ஆங்கில ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில் ரஷ்மிகாவிடம் பெற்றோர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
திரைத்துறையில் உங்களின் வளர்ச்சி குறித்து பெற்றோர் பெருமை கொள்கிறார்களா என்ற கேள்விக்கு ராஷ்மிகா பதில் கூறியதாவது, "அப்படி ஒன்றும் இல்லை. காரணம் எனது பெற்றோர் சினிமா துறையில் இருந்து விலகியே இருக்கிறார்கள். அவர்களின் மகளாகிய நான் என்ன செய்கிறேன் என்று அவர்கள் அறிந்து கொள்வதில்லை. ஆனால், எனக்கு விருதுகள் கிடைத்தால் அது அவர்களுக்கு பெருமையாக இருக்கும். எனவே, நான் துறையில் சிறப்பாக செயல்பட்டு விருதுகள் வாங்கி அவர்களை பெருமைபடுத்த வேண்டும்.
என்னை அவர்கள் எந்த குறையும் இன்றி வளர்த்தனர். குழந்தையாக இருக்கும் போது அவர்களால் முடிந்த அனைத்தையும் எனக்கு செய்து கொடுத்தனர். அதற்கு நான் நன்றி கடன் பட்டவள். எனவே, இப்போது நான் அவர்களை பார்த்துக்கொள்ள வேண்டிய தருணம்" என்றுள்ளார்.
இதையும் படிங்க: என் உயிர் துணையே - அஜித் - ஷாலினியின் ரொமான்டிக் போஸ் - வைரலாகும் படங்கள்
நடிகை ராஷ்மிகா இதற்கு முந்தைய பேட்டி ஒன்றில் கூட தனது குழந்தை பருவத்தில் பெற்றோர் பொருளாதார ரீதியாக சந்தித்த நெருக்கடிகள் குறித்து பேசியுள்ளார். வாடகை கொடுக்க முடியாமல் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை வீடு தேடி தேடி அலைந்துள்ளோம். குழந்தையாக இருக்கும் போதே பெற்றோர் சந்தித்த கஷ்டங்களை உணர்ந்தவள் நான் என்று அவர் கூறியுள்ளார். தற்போது அல்லு அர்ஜுனுடன் ஜோடியாக புஷ்பா இரண்டாம் பாகம் படத்தில் ராஷ்மிகா நடித்து வருகிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.