ராம்சரண் - ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இந்த திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த படத்தின் இசை, வரிகள் மற்றும் நடனம் ஆகியவை திரையரங்கில் ரசிகர்களை நடனம் ஆட வைத்தன.
இந்த பாடல் இந்தியா தாண்டி வெளிநாடுகளிலும் கவனம் எடுத்தது. இது குறித்து பேசிய இயக்குநர் ராஜமெளலி, ஆர்.ஆர்.ஆர் படத்தில் நாட்டு நாட்டு பாடல் இடம்பெற்ற இடத்திற்காக முதலில் இரண்டு டியூன்களை கீரவாணி உருவாக்கினார். அந்த இரண்டில் எந்த டியூனை வைப்பது என்ற ஒரு குழப்பம் தனக்கு வந்ததாகவும், அப்போது தன்னுடைய மகன் கார்த்திகேயா மற்றும் கீரவாணியின் மகன் பைரவா ஆகியோர் நாட்டு நாட்டு ட்யூனை தேர்வு செய்தனர். குறிப்பாக, இதில் என்ன சந்தேகம்! இந்த டியூன்தான் நன்றாக இருக்கிறது என்று அவர்கள் கூறியதாக, அந்தப் படத்திற்கான நேர்காணல் சமயத்தில் நம்மிடம் தெரிவித்தார். அப்படி தேர்வு செய்யப்பட்ட நாட்டு நாட்டு பாடல் தற்போது ஆஸ்கர் விருது வென்றுள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்கா டிவி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரை பேட்டி எடுத்தவர் ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற பாலிவுட் திரைப்படம் என்று கூற அப்போது இடைமறித்த பிரியங்கா சோப்ரா ‘ஆர்.ஆர்.ஆர்’ பாலிவுட் திரைப்படம் அல்ல, அதுவொரு தமிழ் திரைப்படம் என்று கூறினார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் கிண்டல் அடித்துள்ளனர்.
மேலும், பிரியங்கா சோப்ரா, எஸ்.எஸ்.ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு அனுப்பப்பட்டதில் இருந்து பெரும் ஆதரவாளராக இருந்து வருகிறார். அமெரிக்காவில் நடந்த ஆர்.ஆர்.ஆர் படத்தின் திரையிடலில் கலந்துகொண்டு படத்திற்கு சத்தம் போட்டு தனது மகிழ்ச்சியையும் வெளிபடுத்தியுள்ளார்.
பின்னர், எஸ்.எஸ்.ராஜமௌலி மற்றும் எம்.எம்.கீரவாணியுடன் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்த அவர், படத்திற்கு வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தார். மேலும், ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா தம்பதியினர் ஆஸ்கார் விருது விழாவிற்கு முன்னதாக லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பிரியங்காவின் இல்லத்தில் விருந்து அளித்துள்ளார். ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் நாயகர்களில் ஒருவரான ராம்சரண் தேஜா ஜோடியாக ஹிந்தி படம் ஒன்றில் பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பிரியங்காவின் பதில் நெட்டிசன்களால் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது குறிப்பிடதக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Priyanka Chopra, Rajamouli