முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Video : "பாபா படத்தால தான் என் கேரியரே போச்சு..." - பேட்டியின்போது புலம்பிய மனிஷா கொய்ராலா!

Video : "பாபா படத்தால தான் என் கேரியரே போச்சு..." - பேட்டியின்போது புலம்பிய மனிஷா கொய்ராலா!

ரஜினிகாந்த் - மனிஷா கொய்ராலா

ரஜினிகாந்த் - மனிஷா கொய்ராலா

இந்த மூன்று படங்களுமே தோல்விப்படாக அமைந்தன. இதனால் தமிழில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இயக்குநர் மணிரத்னத்தின் பாம்பே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே அறிமுகமானவர் மனிஷா கொய்ராலா. பின்னர் ஷங்கர் இயக்கத்தில் மனிஷா கொய்ராலா நடித்த இந்தியன் மற்றும் முதல்வன் படங்கள் தமிழில் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றன. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஷாருக்கான் ஜோடியாக இவர் நடித்த தில் ஷே படம் தமிழில் உயிரே என்ற பெயரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதனால் இவருக்கு தென்னிந்திய அளவில் வாய்ப்புகள் குவிந்தன. குறிப்பாக தமிழில் கமல்ஹாசனுடன் ஆளவந்தான், மும்பை எக்ஸ்பிரஸ், ரஜினிகாந்த்துடன் பாபா ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக இந்த மூன்று படங்களுமே தோல்விப்படாக அமைந்தன. இதனால் தமிழில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த மனிஷா கொய்ராலா அதிலிருந்து மீண்டு திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்துவருகிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் தனுஷுடன் மாப்பிள்ளை படத்தில் நடித்திருந்தார். ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, நேபாளம் ஆகிய மொழி படங்களில் மனிஷா கொய்ராலா நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு மனிஷா கொய்ராலா பேட்டி அளித்திருந்தார். அப்போது பேசிய அவர், பாபா படம் தான் தமிழில் கடைசி பெரிய படம் அல்லது தென்னிந்திய படம். காரணம் அந்தப் படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது. அந்தப் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் படம் தோல்வியடைந்ததால் தென்னிந்தியாவில் என் கேரியர் முடிந்தது என நினைத்தேன். கடைசியில் அது தான் நடந்தது. பாபா படத்துக்கு முன் நிறைய தென்னிந்திய படங்களில் நடித்திருந்தேன். ஆனால் அந்தப் படம் தோல்வியடைந்ததால் எனக்கு வாய்ப்புகள் வருவது நின்றுவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: AR Rahman, Rajinikanth