முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்துட்டேன், ஆனா... - உடல்நிலை குறித்து பதிவிட்ட குஷ்பு

மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்துட்டேன், ஆனா... - உடல்நிலை குறித்து பதிவிட்ட குஷ்பு

குஷ்பு

குஷ்பு

நடிகை குஷ்பு தனது உடல்நிலை குறித்து டிவிட்டரில் பதிவிட்ட நிலையில் அவரது பதிவு வைரலாகி வருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பிரபல நடிகையான குஷ்பு, பாஜகவில் இணைந்த பிறகு தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். கட்சி பணிகளில் தவறாமல் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் நடிகை குஷ்புவுக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் சிகிச்சைக்காக அவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்தார்.

மருத்துவமனையில் இருக்கும் படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர், நான் ஏற்கனவே சொன்னது போல் புளூ காய்ச்சல் என்பது மிகவும் மோசமானது. அது என்னை சமீபத்தில் பாதித்துவிட்டது. காய்ச்சல், உடல் வலி மற்றும் பலவீனம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நான் அதிர்ஷ்டவசமாக மருத்துவமனையில் தகுந்த சிகிச்சை பெற்று வருகிறேன்.

உங்கள் உடல் சோர்வாக இருந்தால் தயவு செய்து அதன் அறிகுறியை புறக்கணிக்காமல் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளுங்கள்" என்று தெரிவித்திருந்தார்.

top videos

    குஷ்பு நலம் பெற பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிவிட்டேன். ஒரு வாரத்துக்கு ஓய்வெடுக்குமாறும், பயணங்களை தவிர்க்குமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர். நான் நலம் பெற வேண்டிய அனைவருக்கும் நன்றி. இந்த அளவுக்கு அன்பை பெற நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

    First published:

    Tags: Khushbu sundar