முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நான் என் மகனுக்கு சான்றிதழில் சாதி பெயரை குறிப்பிடவில்லை - நடிகை கயல் ஆனந்தி!

நான் என் மகனுக்கு சான்றிதழில் சாதி பெயரை குறிப்பிடவில்லை - நடிகை கயல் ஆனந்தி!

நடிகை கயல் ஆனந்தி

நடிகை கயல் ஆனந்தி

இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் `இராவண கோட்டம்'. சாந்தனு நாயகனாக நடித்துள்ள இப்படத்தை கண்ணன் ரவி தயாரித்துள்ளார். இதில் சாந்தனுவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

2014 ஆம் ஆண்டு “பொறியாளன்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஆனந்தி. அதே ஆண்டு வெளியான ‘கயல்’ படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு கயல் ஆனந்தி என்று பெயர் வந்தது.

பின்னர் த்ரிஷா இல்லனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, சண்டி வீரன், விசாரணை, பரியேறும் பெருமாள் போன்ற பல படங்களில் நடித்தார். இதையடுத்து இணை இயக்குநர் சாக்ரடீஸ் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். அதனை தொடர்ந்து இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் தற்போது இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் `இராவண கோட்டம்'. சாந்தனு நாயகனாக நடித்துள்ள இப்படத்தை கண்ணன் ரவி தயாரித்துள்ளார். இதில் சாந்தனுவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

`இராவண கோட்டம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசரை நடிகர் சிம்பு சமூக வலைத்தளத்தின் வாயிலாக வெளியிட்டிருந்தார். இப்படம் வருகிற மே 12ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.




 




View this post on Instagram





 

A post shared by News18 Tamil Nadu (@news18tamilnadu)



இந்நிலையில் இந்த படத்தின் குழுவினர் நியூஸ் 18 தமிழ்நாடு செய்திக்கு பேட்டியளித்திருந்தனர். அந்த பேட்டியில் பேசிய கயல் ஆனந்தி நான் என்னுடைய மகனுக்கு சான்றிதழில் சாதி பெயரை குறிப்பிடவில்லை, சாதியில்லா சான்றிதழ் தான் பெற்றுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

Also read... இஸ்லாம் மதத்திற்கு எதிரானது இல்லை ஃபர்ஹானா படம் - படக்குழு விளக்கம்!

அதற்கு காரணம் இதுக்கு முன்னாடி அனைவரும் சாதி பெயரை சுமந்துட்டு இருந்தாங்க. நான் என் மகனுக்கு அது தொடர விரும்பவில்லை. இந்த முடிவிற்கு காரணம் நான் படித்த புத்தகங்களும் நான் சந்தித்த நபர்களுடனான உரையாடல் மூலமாக எனக்கு தோன்றியது என்றும் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Entertainment