ஆரம்ப காலத்தில் வெறும் 500 ரூபாயுடன் மும்பை வந்ததாக நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.
தமிழில் தாம்தூம் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த கங்கனா ரணாவத் தலைவி படத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமானார். இந்தியில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.
தற்போது எமர்ஜென்சி என்ற படத்தை இயக்கி தயாரிக்கிறார். இந்த படம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகிறது. இதில் இந்திரா காந்தி வேடத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார்.
இந்த படத்தை தயாரிப்பது குறித்து பேசிய கங்கனா, நான் சொந்தமான ஒரு ஹோட்டல் தொடங்க வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால், பொருளாதார பிரச்சனையால் அது நிறைவேறாமல் போனது. தற்போது நான் வசிக்கும் வீடு உள்பட விலைமதிக்கத்தக்க பொருட்கள் அனைத்தையும் அடமானம் வைத்து எமர்ஜென்சி படத்தை தயாரித்து வருகிறேன் என தெரிவித்தார்.
ஆரம்ப காலத்தில் நான் வெறும் 500 ரூபாயோடு மும்பை வந்தேன் என்றும், ஒரு வேளை இந்த படத்தில் நான் முதலீடு செய்த மொத்த பணத்தையும் இழக்க வேண்டி சூழல் வந்தால், மும்பை வந்த போது எந்த நிலையில் இருந்தேனோ அதே நிலைக்கு சென்று விடுவேன். ஆனாலும், தன்னம்பிக்கை இழக்கமாட்டேன். சொந்த காலில் தான் நிற்பேன் என கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kangana Ranaut, Movie