24 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு, கடந்த 10ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 73.19 சதவிகித வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணத் தொடங்கியது முதலே காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்தது.
பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில், 135 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. பாஜக 66 இடங்களை மட்டுமே பெற்று ஆட்சியை இழந்துள்ளது. மத சார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் உற்சாகமாக வெற்றியைக் கொண்டாடினர்.
இதையும் படிக்க | ''ஆமா நீ கூப்பிட்டு வச்சு பண்ண வேலைக்கு...'' - லோகேஷை கலாய்த்த விஜய் - தரமான சம்பவம்
இந்த நிலையில் நடிகையும் தமிழக பாஜக நிர்வாகியுமான நமீதா, கோவையில் பாஜக சார்பில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியைத் துவங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''எல்லோருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள். அம்மாவாக என்னுடைய முதல் அன்னையர் தினம். மைசூர் சிங்கம் அண்ணாமலை வந்ததுக்கு பிறகு பாஜக கட்சி நல்லா வளர்ந்துட்டு இருக்கு. எங்க போனாலும் பாஜக பத்தி தான் பேசறாங்க. இப்போ அவரோட பார்வை தமிழ்நாட்டு மேல இருக்கு'' என்றார்.
கர்நாடகா தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு பதிலளித்த நமீதா, ''தலைவர் அண்ணாமலை தன்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயலாற்றுகிறார். பிரதமர் நரேந்திர மோடி மேல், தலைவர் அண்ணாமலை மேல் நம்பிக்கை இருக்கிறது. இன்று இல்லை என்றாலும் இன்னொரு நாள் நடக்கும்'' என்று பேசினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actress Namitha, Annamalai, BJP