முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஐஸ்வர்யா ராஜேஷின் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்த மர்ம நபர்கள்.. எலான் மஸ்குக்கு பறந்த கோரிக்கை!

ஐஸ்வர்யா ராஜேஷின் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்த மர்ம நபர்கள்.. எலான் மஸ்குக்கு பறந்த கோரிக்கை!

ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறோம் என அவரது பிஆர்ஓ குறிப்பிட்டுள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். மார்ச் 24 அன்று, அவரது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக அவரது பி.ஆர்.ஓ யுவராஜ் சமூக ஊடகங்களில் தெரிவித்திருந்தார். அதோடு ஐஸ்வர்யாவின் அக்கவுண்டை மீட்டுத் தரக்கோரி எலோன் மஸ்க்கிற்கும் கோரிக்கை வைத்திருந்தார்.

ஐஸ்வர்யா ராஜேஷின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது. அவரின் பி.ஆர்.ஓ இதனை ரசிகர்களுடன் பகிர்ந்துக் கொண்டார். "நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை விரைவில் தீர்க்கப்படும். அதுவரை ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்கள் அவரது கணக்கில் பதிவிடப்பட்டுள்ளதை கவனிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று யுவராஜ் தெரிவித்திருந்தார்.

மற்றொரு ட்வீட்டில், எலோன் மஸ்க்கைக் குறிப்பிட்டு, ஐஸ்வர்யா ராஜேஷின் கணக்கை மீட்டெடுக்க உதவுமாறு உதவி கோரினார். "அன்புள்ள திரு எலோன் மஸ்க், நான் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் அதிக ரசிகர்களைக் கொண்ட தென்னிந்திய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் விளம்பரதாரர். ஐஸ்வர்யா ராஜேஷின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறோம். இந்த சிக்கலைத் தீர்க்க உங்கள் குழுவின் உடனடி உதவியை நாங்கள் எதிர்பார்க்கிறோம்” எனவும் மற்றொரு ட்வீட்டில் குறிப்பிட்டார்.

சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் ரன் பேபி ரன் படம் வெளியானது. தற்போது மோகன்தாஸ், தீயவர் குலை நடுங்க, ஹெர் ஸ்டோரி, துருவநட்சத்திரம் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actress Aishwarya Rajesh