முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விஜய் நடிக்கும் லியோ படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம் - சினிமா வட்டாரங்களில் பரபர தகவல்!

விஜய் நடிக்கும் லியோ படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம் - சினிமா வட்டாரங்களில் பரபர தகவல்!

விஜய்

விஜய்

லியோ படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் சமீபத்தில் நிறைவடைந்தது. படக்குழுவினர் காஷ்மீரில் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசிய வீடியோவை தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் வெளியிட்டிருந்தது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம், ‘லியோ’. கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது.

கடந்த ஒரு மாதமாக காஷ்மீரில் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இதில் 500-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர். லியோ படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் சமீபத்தில் நிறைவடைந்தது. படக்குழுவினர் காஷ்மீரில் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசிய வீடியோவை தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் வெளியிட்டிருந்தது. இதனையடுத்து இந்தப் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் துவங்கப்படவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின

பான்-இந்தியன் ஆக்‌ஷன் படமான 'லியோ'வில் விஜய் கேங்ஸ்டராக நடிக்கிறார். 15 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடன் இணைந்திருக்கிறார் த்ரிஷா. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படம் அக்டோபர் மாதம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

விக்ரம் படத்தை தொடர்ந்து லியோ படமும் LCUவில் இணையுமா என்பது குறித்து அறிந்துக் கொள்ள ரசிகர்கள் அதிகமான ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் இதுகுறித்து வாய் திறக்காமல் மவுனம் சாதித்து வருகிறார் லோகேஷ். இந்நிலையில் விக்ரம் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்த பகத் பாசில் லியோ படத்தில் இணைந்ததாக வெளியான தகவலால் இந்தப் படம் கண்டிப்பாக LCUவில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து இப்படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங் சென்னையில் மார்ச் 29 தேதி நடைபெறும் என்று கூறப்பட்டது. இதன் பின்னர் சில காட்சிகள் ஹைதராபாதில் எடுக்கப்போவதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் லியோ படத்தின் படப்பிடிப்பில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அது என்னவென்றால் இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் 4-ம் தேதி தொடங்குவதாகவும், மேலும் சில காட்சிகள் ஹைதராபாத்தில் எடுக்கப் போவதில்லை என்றும் அதற்கு பதிலாக சென்னையிலேயே மொத்த படப்பிடிப்பும் நடைபெறும் என்றும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Vijay, Lokesh Kanagaraj