முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விஜய்யின் முதல் அரசியல் மாநாடு...? போஸ்டர் மூலம் கோரிக்கை வைத்த திருச்சி ரசிகர்கள்...!

விஜய்யின் முதல் அரசியல் மாநாடு...? போஸ்டர் மூலம் கோரிக்கை வைத்த திருச்சி ரசிகர்கள்...!

விஜய்

விஜய்

திருச்சியை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க முன்னாள் மாவட்டத் தலைவர் ஆர்.கே.ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பிரம்மாண்ட சுவர் விளம்பரங்களை வரைந்துள்ளனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

i நடிகர் விஜய்யின் முதல் அரசியல் மாநாட்டை திருச்சியில் நடத்த வேண்டும் என்று அவரது ரசிகர்கள் சுவர் விளம்பரங்கள் மூலம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

விஜய் மக்கள் இயக்கத்தினர் பல்வேறு இடங்களில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். அத்துடன் கடந்த உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிட்டு சில இடங்களில் அந்த மக்கள் இயக்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் வெற்றியடைந்தனர்.

அரசியலுக்கு வருவதற்கு முன்னோட்டமாக சில சமூக நடவடிக்கைகளில் நடிகர் விஜய் ஈடுபட்டுவருவதாக கூறப்படுகிறது. அதன்படி கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என நடிகர் விஜய் அறிவுறுத்தினார். அவரது உத்தரவை ஏற்று தமிழ்நாடு முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இச்செயல்பாடுகள், நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கான தயாரிப்பு பணிகள் என்றே அவரது ரசிகர்கள் உறுதியாக நம்புகிறார்கள். இந்நிலையில் நடிகர் விஜய்யின் பிறந்தநாளான, ஜூன் 22ம் தேதி, மதுரை அல்லது கோவையில், விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிகிறது. இம்மாநாட்டை விஜய் மக்கள் இயக்கத்தின் முதல் அரசியல் மாநாடாக நடத்த, விஜய் மக்கள் இயக்கத் தலைவர் புஸ்சி ஆனந்த் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில், திருச்சியை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க முன்னாள் மாவட்டத் தலைவர் ஆர்.கே.ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் திருச்சி மாநகரத்தின் பல்வேறு புறநகர் பகுதிகளில் மண்ணச்சநல்லூர், தொட்டியம் ஆகிய பகுதிகளில் பிரம்மாண்ட சுவர் விளம்பரங்களை வரைந்துள்ளனர்.

அவற்றில், நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்திருப்பதோடு, 'ஜூன் 22ம் தேதி பிறந்தநாள் காணும் தளபதியாரே.. நாளைய முதல்வரே.. திருச்சி என்றாலே திருப்பம் தான், விரைவில் மாநாடு; காத்திருக்குது தமிழ்நாடு' என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விளம்பரங்கள் மூலம், விஜய் மக்கள் இயக்கத்தின் முதல் மாநாட்டை திருச்சியில் நடத்த வேண்டும் என்ற தங்களது விருப்பத்தை, கோரிக்கையாக வைத்துள்ளனர். கடந்த, 2020ம் ஆண்டு, நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் உடன் இணைந்து, அரசியல் கட்சி துவங்கியதால், விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டவர் ஆர்.கே.ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Actor Vijay, Vijay makkal iyakkam