முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 234 தொகுதிகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 1,500 மாணவர்களை சந்திக்கிறார் நடிகர் விஜய்...!

234 தொகுதிகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 1,500 மாணவர்களை சந்திக்கிறார் நடிகர் விஜய்...!

விஜய்

விஜய்

நடிகர் விஜய் திரைப்படத்தை தாண்டி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழகத்தில் 12 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகளின் அதிக மதிப்பெண் பெற்ற சுமார் 1500 மாணவ, மாணவிகளை நடிகர் விஜய் ஜூன் மாதத்தில் சந்திக்கிறார்.

நடிகர் விஜய் திரைப்படங்களில் நடிப்பதைத் தாண்டி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது குறிப்பாக தன்னுடைய 70-வது திரைப்படத்தை முடித்துக் கொண்டு அவர் அரசியல் கட்சியை தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பல்வேறு அரசியல் நிகழ்வுகளை அவருடைய விஜய் மக்கள் இயக்கம் செய்து செய்து வருகிறது.

அதில் முதல் கட்டமாக பல்வேறு தலைவர்களின் சிலைக்கு மரியாதை செய்து வருகின்றனர். இந்த நிலையில் 12 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் பெற்ற 1500 மாணவர்களை அவர் சந்தித்து நிதி உதவி வழங்க உள்ளார்.

அது மட்டும் இல்லாமல் ஒரு தொகுதியில் அதிக மதிப்பெண் பெற்ற மூன்று பிளஸ் டூ மாணவர்கள் மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற பத்தாம் வகுப்பு மாணவர்கள் என அவர்கள் தேர்வு செய்கின்றனர். அவர்களுடன் தாய் தந்தை இழந்த அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களையும் விஜய் சந்தித்து நிதி உதவி வழங்க உள்ளார் என கூறப்படுகிறது.

Also read... விஜய்யின் முதல் அரசியல் மாநாடு...? போஸ்டர் மூலம் கோரிக்கை வைத்த திருச்சி ரசிகர்கள்...!

இதற்கான பட்டியல் தயாரித்து விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு ஜூன் மாதம் நடைபெறலாம் எனவும் தெரிவிக்கின்றனர். இதற்காக ஸ்ரீவாரி வெங்கடேஸ்வரா திருமண மண்டபம், நந்தம்பாக்கம் வர்த்தக மையம், நீலாங்கரையில் உள்ள ஆர் கே திருமண மண்டபம் மற்றும் புழல் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபம் என நான்கு இடங்களில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Actor Vijay, Vijay makkal iyakkam