முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அது தவறு... ரசிகருக்கு அட்வைஸ் கூறி ஆட்டோகிராப் போட்டு நெகிழவைத்த விஜய்...

அது தவறு... ரசிகருக்கு அட்வைஸ் கூறி ஆட்டோகிராப் போட்டு நெகிழவைத்த விஜய்...

விஜய்

விஜய்

சென்னையில் ரசிகர்களைச் சந்தித்து விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதனால், ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.

  • Last Updated :
  • Chennai, India

சென்னை நீலங்கரையை அடுத்த பனையூரில் உள்ள மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் விஜய் இன்று ரசிகர்களைச் சந்தித்தார். தமிழகத்தில் 200 முதல் 400 நாட்களுக்கு மேலாக பொதுமக்களுக்கு இலவசமாக விலையில்லா விருந்தகம் நடத்தும் விஜய் மக்கள் இயக்கத்தின் திருச்சி, சேலம், தஞ்சாவூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களைச் சார்ந்த மக்கள் இயக்க நிர்வாகிகளைச் சந்தித்து விஜய் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்ட விஜய் திருச்சியை சார்ந்த ஜில்லா பிரசன்னா என்ற ரசிகர், அவரது நெஞ்சில் ஆட்டோகிராப் கேட்டபோது அது தவறு என்று தவிர்த்து வெள்ளை காகிதத்தில் பிரியமுடன் விஜய் டு ஜில்லா பிரசன்னா என்று ஆட்டோகிராப் போட்டு தனது வாழ்த்தை தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து மக்கள் பணிகளை செய்ய அவர் அறிவுறுத்தியதாகவும் வழக்கம்போல் கூட்டத்திற்கு வரும் இன்னோவா காரில் வராமல் எளிமையான காரில் வந்து ரசிகர்களை சந்தித்தது ரசிகர்களிடையே பெறும் நெகிழ்சியை ஏற்படுத்தியது.

top videos

    செய்தியாளர்: வினோத் கண்ணன்.

    First published:

    Tags: Actor Vijay