முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Video: மனோபாலா மறைவு... நடிகர் விஜய் நேரில் அஞ்சலி... மகன் கையைப் பிடித்து ஆறுதல்..!

Video: மனோபாலா மறைவு... நடிகர் விஜய் நேரில் அஞ்சலி... மகன் கையைப் பிடித்து ஆறுதல்..!

மனோபாலாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் விஜய்

மனோபாலாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் விஜய்

Actor manobala death | மறைந்த நடிகர் மனோபாலாவின் உடலுக்கு இயக்குநரும் நடிகருமான மனோபாலா நேரில் அஞ்சலி செலுத்தினார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் மனோபாலாவின் மரைவு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்கள் பலரும் அவருடன் பணியாற்றிய அனுபவங்களை தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அவரது மறைவுக்கு இயக்குநர் மணிரத்னம், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், நடிகர் சிவக்குமார், இளவரசு, இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இசையமைப்பாளர் தினா, நடிகர் சின்னி ஜெயந்த், தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், நடிகர் கவுண்டமணி, செந்தில் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிக்க | “நல்லா இருந்தாரு... எதிர்பாராத நேரத்துல திடீர்னு இப்படி ஆகிடுச்சு..” - மனோபாலா மகன் ஹரீஷ்

இந்த நிலையில் நடிகர் விஜய் நேரில் சென்று நடிகர் மனோபாலாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் மனோபாலா மனைவி, அவரது மகன் ஹரிஷின் கைகளைப் பிடித்து ஆறுதல் தெரிவித்தார்.

அழகிய தமிழ் மகன், நண்பன், துப்பாக்கி, தலைவா, தெறி, பிகில் ஆகிய படங்களில் விஜய்யுடன் மனோபாலா இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Actor Vijay