நடிகர் விஜய் 12 மற்றும் 10ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு உதவிகளை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் முடிவடைந்துள்ளன. அதில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. இந்த நிலையில் நடிகர் விஜய் 12 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களை மாவட்ட வாரியாக தேர்வு செய்து உதவிகளை வழங்க திட்டமிட்டு வருகிறார்.
இதற்கான முயற்சிகளை அவரின் மக்கள் இயக்கம் செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக மாவட்டம் வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு உதவிகளை வழங்க திட்டமிட்டுள்ளனர். அதற்காக மாணவ மாணவிகளை தேர்வு செய்து அவர்களின் தேர்வு மதிப்பெண் சான்றிதழ், ஆதார் சான்றிதழ் மற்றும் வங்கி கணக்கு ஆவணங்களை தயார் செய்து விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப மாவட்ட இயக்கங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Also read... நயன்தாரா அழகி.. விஜய் சேதுபதி அடக்கமானவர்.. கோலிவுட் நடிகர்களை புகழ்ந்து தள்ளிய ஷாருக்கான்!
விரைவில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் உள்ளது. அது முடிவடைந்ததும் மாணவர்களின் தகவல்களை சேகரித்து அனுப்ப மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Vijay