முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சர்வதேச தரத்துடன் தயாராகும் விஜய் - வெங்கட் பிரபுவின் 'தளபதி 68' - படத்தின் ஹைலைட்ஸ் என்ன தெரியுமா?

சர்வதேச தரத்துடன் தயாராகும் விஜய் - வெங்கட் பிரபுவின் 'தளபதி 68' - படத்தின் ஹைலைட்ஸ் என்ன தெரியுமா?

விஜய் - வெங்கட் பிரபு

விஜய் - வெங்கட் பிரபு

நடிகர் விஜய்யின் தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்கவிருப்பதாகவும், யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் மற்றும் ஜெகதீஸ் தயாரித்துவரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

லியோ படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தற்போது சென்னையில் விஜய் - அர்ஜூன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுவருவதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 68 படத்தை கோபிசந்த் மல்லினேனி இயக்கவிருப்பதாக கூறப்பட்டது. இதனையடுத்து மீண்டும் தெலுங்கு இயக்குநரா என விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியானார்கள்.

இதையும் படிக்க | நான் பிளான் பண்ணி பண்ணேன் - 2,000 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டது குறித்து விஜய் ஆண்டனி அதிரடி

இந்த நிலையில் விஜயின் அடுத்த படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவியது. இந்த தகவல் உறுதியாக வேண்டும் என விஜய் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்தனர். அதற்கேற்ப இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கவிருப்பதாகவும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் இந்தப் படத்தை தயாரிக்கவிருப்பதாகவும் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் ஏஜிஎஸ்ஸின் 25வது படம் எனவும் சர்வதேச தரத்துடன் இந்தப் படம் உருவாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் இசையமைப்பாளர் யுவனா? அனிருத்தா? என்ற கேள்விக்கும் விடைகிடைத்துள்ளது. புதிய கீதை படத்துக்கு பிறகு இந்தப் படத்துக்காக விஜய்யுடன் யுவன் இணையவிருக்கிறார். இதனால் இருதரப்பு ரசிகர்களும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Venkat Prabhu, Yuvan Shankar raja