திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகனை வழிபட்டுச் செல்வது வழக்கம். இதில் திரைத்துறை பிரபலங்களும் அரசியல் கட்சியைச் சார்ந்த பலரும் வருகை தந்து முருகனை வழிபடுவர் இந்நிலையில், வாகை சூடவா, களவாணி திரைப்படங்களில் நடித்த நடிகர் விமல் இன்று தனது மனைவி பிரியதர்ஷினியுடன் குடும்பத்துடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
அதனை தொடர்ந்து திருக்கோவில் வளாகத்தில் உள்ள யானை பராமரிப்பு கூடத்தில் உள்ள யானை தெய்வானைக்கு நடிகர் விமல் தனது குடும்பத்துடன் வந்து யானை பாகன்கள் மூலம் கரும்பு உள்ளிட்ட உணவு வகைகளை யானைக்கு வழங்கினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விமல்,
தான் மா.பொ.சி என்ற புதிய திரைப்படத்தில் நடத்து வருகிறேன். மைக்கேல் என்ற புது இயக்குநரிடம் கை கோர்த்து புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறேன். விலங்கு சீசன் 2 வில் நடித்து வருகிறேன்.
அதை தொடர்ந்து, தேசிங்கு ராஜா , கலகலப்பு போன்ற முழு நீள காமெடி படம் செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், விலங்கு வெப் தொடருக்கு பிறகு நல்ல கதையம்சம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறேன். அம்மாதிரியான படங்களாக மா.பொ.சி. இருக்கும். இந்தப் படத்துக்காக முதன்முதலில் சென்னை வட்டார மொழியில் நடித்து வருகிறேன். என்னை பற்றிய பரவி வரும் வதந்திகளை முருகன் பார்த்து கொள்வார். நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது வழங்கியது இந்திய நாட்டிற்கு பெருமை என்று பேசினார்.
செய்தியாளர் - முரளி கணேஷ், திருச்செந்தூர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tiruchendur, Vemal