முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நடிகர் சூர்யாவின் 42வது படத்தின் தலைப்பு கங்குவா.. படக்குழு அறிவிப்பு

நடிகர் சூர்யாவின் 42வது படத்தின் தலைப்பு கங்குவா.. படக்குழு அறிவிப்பு

சூர்யா கங்குவா

சூர்யா கங்குவா

Surya 42 movie title | சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கியது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சூர்யா நடித்த வரும் அவரின் 42 வது படத்திற்கு கங்குவா என தலைப்பு வைத்திருக்கின்றனர்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கியது. இது சூர்யாவில் 42 வது படம் என்பதால் சூர்யா 42 என்ற தற்காலிக தலைப்புடன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்த படத்தின் தலைப்பை அறிவித்திருக்கின்றனர். சூர்யா - சிவா கூட்டணியில் உருவாகும் படத்திற்கு கங்குவா என தலைப்பு வைத்திருக்கின்றனர்.

இந்த திரைப்படம் இரண்டு வேறு காலகட்டங்களில், வரலாற்றுப் பின்னணியில் நடைபெறும் வகையில் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் கங்குவா இரண்டு பாகங்களாக உருவாகிறது.

இதில் சூர்யாவுடன் திஷா பதானி நாயகியாக நடிக்கிறார், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் அதற்கான வியாபாரங்கள் ஒருபுறம் வேகம் எடுத்து இருக்கின்றன. குறிப்பாக பாடல் உரிமை, டிஜிட்டல் உரிமை உள்ளிட்டவற்றை பெரும் தொகைக்கு விற்பனை செய்துள்ளனர்.

top videos
    First published:

    Tags: Actor Surya, Movie, Surya next