முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பகாசூரன் படத்தில் சூர்யாவை கேலி செய்தாரா மோகன் ஜி..? இணையத்தில் வைரலாகும் காலண்டர் படம்!

பகாசூரன் படத்தில் சூர்யாவை கேலி செய்தாரா மோகன் ஜி..? இணையத்தில் வைரலாகும் காலண்டர் படம்!

மோகன் ஜி, சூர்யா

மோகன் ஜி, சூர்யா

பகாசூரன் படத்தில் நடிகர் சூர்யாவை இயக்குநர் மோகன் ஜி அசிங்கப்படுத்தும் வகையில் காலண்டர் வைத்ததாக தற்போது ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

செல்வராகவன், நட்டி, ராதாரவி, கே.ராஜன், தாரக்‌ஷி உள்ளிட்டோர் நடிப்பில் மோகன்.G இயக்கியுள்ள திரைப்படம் பகாசூரன். இந்த திரைப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். மொபைல் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் இந்த காலத்தில் எவ்வளவு பிரச்னைகளை உருவாக்குகின்றன, அது பெண்களை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பதை கதைகளமாக எடுத்துக்கொண்டு இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார் மோகன்.G.

இந்த திரைப்படத்தின் நாயகன் செல்வராகவன் மூன்று கொலைகளை செய்கிறார். இன்னொரு புறம் கல்லூரி பெண்களும், இளம் பெண்களும் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதற்கான காரணங்களை தேடி மற்றொரு நாயகனாக நட்டி செல்கிறார். செல்வராகவன் ஏன் கொலை செய்கிறார்? பெண்கள் ஏன் தங்களை மாய்த்துக் கொள்கிறார்கள்? என்ற காரணங்களை இணைத்து தன்னுடைய பாணியில் திரைக்கதை எழுதி படமாக்கியுள்ளார் இயக்குனர். கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம், மோகன்.ஜியின் கடந்த படங்களைப் போலவே இந்தப படமும் சர்ச்சையில் சிக்கியது.

இந்நிலையில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு ஓடிடி தளத்தில் ஜெய்பீம் படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் பெயர் பெற்றது. ஜெய்பீம் படத்தில் போலீஸ் அதிகாரி வீட்டில் அக்னி சட்டி இருப்பது போல ஒரு காட்சி இடம்பெறும். உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் குற்றவாளியான போலீஸ் ஒருவரின் வீட்டில் அக்னி சட்டி இருப்பது போல காட்சி இடம்பெற்றது பாமகவினரை கோபப்படுத்தியது.

இதனை தொடர்ந்து பகாசூரன் படத்தில் ஒரு விலைமாது ஒருவரின் வீட்டில் உள்ள காலெண்டரில் சிவக்குமார் அண்ட் கோ என எழுதப்பட்டுள்ளது. இதை சரியாக நோட் பண்ண நெட்டிசன்ஸ், சூர்யாவை கேலி செய்யும் விதமாக மோகன் ஜி வேண்டும் என்றே அந்த காலண்டரை வைத்துள்ளார் என்றும், பாமக ஆதரவாளரான மோகன் ஜி ஜெய்பீம் அக்னி குண்ட காலண்டர் சர்ச்சைக்கு பழிதீர்த்துக் கொண்டார் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Actor Surya