முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ''நான் உயிருடன்தான் இருக்கிறேன்'' - உடல்நிலை குறித்து பரவும் தகவலுக்கு நடிகர் சுதாகர் விளக்கம்

''நான் உயிருடன்தான் இருக்கிறேன்'' - உடல்நிலை குறித்து பரவும் தகவலுக்கு நடிகர் சுதாகர் விளக்கம்

நடிகர் சுதாகர்

நடிகர் சுதாகர்

உடல் நிலை குறித்து பரவும் தகவலுக்கு நடிகர் சுதாகர் விளக்கம் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் அறிமுகமானவர் சுதாகர். தமிழில் தொடர்ந்து கல்லுக்குள் ஈரம், சுவரில்லாத சித்திரங்கள், நிறம் மாறாத பூக்கள் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

பின்னர் தெலுங்கில் காமெடி வேடங்களில் நடிக்கத் துவங்கினார். தமிழில் ரஜினிகாந்த்தின் அதிசய பிறவி படத்திலும் காமெடி வேடத்தில் கலக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் சில படங்களை தயாரிக்கவும் செய்திருக்கிறார்.

கேஜிஎஃப் பட தயாரிப்பு நிறுவனம்.. கவனிக்க வைப்பாரா கீர்த்தி சுரேஷ்? 'ரகு தாத்தா' ஷூட்டிங் அப்டேட்!

top videos

    சமீப காலமாக சுதாகர் படங்கள் எதிலும் நடிக்கவில்லை. இந்த நிலையில் நடிகர் சுதாகர் உடல்நிலை குறித்து தகவல் பரவியது. இதனையடுத்து சுதாகர் வீடியோ மூலம் விளக்கமளித்துள்ளார். அதில், ''எனது உடல்நிலை குறத்து தவறான வதந்திகள் பரவி வருகின்றன. அதனை நம்பாதீர்கள். நான் உயிருடன் நன்றாக இருக்கிறேன். கவலைப்படத் தேவையில்லை'' என்று குறிப்பிட்டுள்ளார்.

    First published:

    Tags: Actor, Health