முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / “தியேட்டருக்கு நீ, நான் என்ற பாகுபாடு கிடையாது...” - ரோகிணி தியேட்டர் விவகாரம் குறித்து நடிகர் சூரி கருத்து

“தியேட்டருக்கு நீ, நான் என்ற பாகுபாடு கிடையாது...” - ரோகிணி தியேட்டர் விவகாரம் குறித்து நடிகர் சூரி கருத்து

நடிகர் சூரி

நடிகர் சூரி

எல்லோரும் சமம் என்பதை தெரியப்படுத்தவே தியேட்டர் என்று ரோகிணி தியேட்டர் விவகாரத்தில் நடிகர் சூரி கருத்து தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான வெற்றிமாறன், நடிகர்கள் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரை வைத்து விடுதலை  திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. அதில் முதல் பாகம் இன்று திரைக்கு வந்துள்ளது. வெற்றிமாறன் தன்னுடைய திரைப்படங்களுக்கு வழக்கமாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷூடன் கூட்டணி அமைப்பார். ஆனால், விடுதலை திரைப்படத்திற்காக முதன் முறையாக இளையராஜாவுடன் கைகோர்த்துள்ளார்.

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி உடன் பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் சண்டைக் காட்சிகளை அமைத்து இருக்கிறார். கடந்த ஆண்டு ‘விடுதலை’ படத்தின் இரண்டு பாகங்களுக்கான படப்பிடிப்பும் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து தற்போது 'விடுதலை' முதல் பாகம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

'விடுதலை' திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு மதுரை மக்கள் மேள தாளத்துடன் பால் குடம் எடுத்து சூரி பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்தனர். இதையடுத்து மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் சூரியிடம் நேற்று ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர்களை அனுமதிக்காதது குறித்து கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய சூரி, "இந்த விஷயம் எனக்கு காலையில் தான் தெரியவந்தது. எல்லாரும் சமம் என்பதை உறுதிப்படுத்துவதற்காக தான் திரையரங்கமே வந்தது. திரையரங்கத்திற்கு நீ, நான் என்ற பாகுபாடு கிடையாது. ரோகிணி திரையரங்கில் நரிகுறவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது வருத்தமளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Actor Soori, Director vetrimaran