முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஒரே நாளில் வெளியாகும் ஜெயிலர் மற்றும் மாவீரன்? சிவகார்த்திகேயன் விளக்கம்!

ஒரே நாளில் வெளியாகும் ஜெயிலர் மற்றும் மாவீரன்? சிவகார்த்திகேயன் விளக்கம்!

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன்

‘மாவீரன்’ திரைப்படமும், ‘ஜெயிலர்’ படமும் ஒரே நாளில் வெளியாகிறதா என்ற கேள்விக்கு நடிகர் சிவகார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

'டாக்டர்', 'டான்' என அடுத்தடுத்து இரண்டு வெற்றிப்படங்களைக் கொடுத்த சிவகார்த்திகேயன் 'பிரின்ஸ்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்தப் படம் ரசிகர்களைக் கவரத் தவறியதால் தோல்வியைத் தழுவியது. சிவகார்த்திகேயனின் இமேஜுக்கு ஏற்ற கதை இல்லாததே இந்தப் படத்தின் தோல்விக்கு காரணம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா மற்றும் யோகி பாபு முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கில் பைலிங்குவல் படமாக உருவாகி வருகிறது. தெலுங்கில் இந்தப் படத்திற்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு 'ஆடை', 'மண்டேலா' ஆகிய படங்களுக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைக்கிறார். இந்தப் படம் வரும் ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கிவிட்டதாக இயக்குநர் நெல்சன் சமீபத்தில் ஒரு விருது விழாவில் தெரிவித்திருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துவருகிறார்.

Also read... இந்த குழந்தை யார் தெரியுமா? இவர்தான் இப்போ டாப் நடிகை - வைரலாகும் போட்டோ!

பான் இந்திய படமாக உருவாகும் இதில் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர். இந்த நிலையில் இந்தப் படம் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயனிடம் மாவீரன் மற்றும் ஜெயிலர் ஒரே நாளில் வெளியாகிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் இன்னும் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Rajinikanth, Sivakarthikeyan