முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அதிதி உடன் காதலா? ரசிகையின் கேள்விக்கு ‘டக்கர்’ பதிலளித்த நடிகர் சித்தார்த்!

அதிதி உடன் காதலா? ரசிகையின் கேள்விக்கு ‘டக்கர்’ பதிலளித்த நடிகர் சித்தார்த்!

சித்தார்த் மற்றும் அதிதி ராவ்

சித்தார்த் மற்றும் அதிதி ராவ்

டக்கர் படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள நடிகர் சித்தார் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் ரசிகை ஒருவர் சித்தார்த்திடம் அவரது காதல் வாழ்க்கையை குறித்து மறைமுகமாக கேள்வி எழுப்பினார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் சித்தார்த் தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் 'இந்தியன் 2' படத்தில் நடித்துவருகிறார். அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் சித்தார்த் தெரிவிக்கும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திவருகின்றன.

இந்த நிலையில் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் காதலித்துவருவதாக கடந்த சில மாதங்களாக தகவல் பரவிவருகிறது. தெலுங்கில் மகாசமுத்திரம் படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இயக்குனர் ஷங்கரின் 'பாய்ஸ்' படம் மூலம் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக அறிமுகமானவர் சித்தார்த். தற்போது இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் சித்தார்த் தற்போது கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள டக்கர் படத்தில் நடித்துள்ளார். இதில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை திவ்யான்ஷா கௌஷிக் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, அபிமன்யூ சிங், முனிஷ்காந்த், ஆர்ஜே விக்னேஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள நடிகர் சித்தார் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் ரசிகை ஒருவர் சித்தார்த்திடம் அவரது காதல் வாழ்க்கையை குறித்து மறைமுகமாக கேள்வி எழுப்பினார்.

Also read... விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ’குக் வித் கோமாளி’ புகழ் - காரணம் இதுதான்!

அந்த கேள்வியில் ''உங்களுக்கும் அவங்களுக்கு காதல்னு ஒரு செய்தி பரவுகிறதே என்று அதிதி ராவுடன் காதல் உள்ளதாக வரும் செய்தி குறித்து கேட்கப்பட்டிருந்தது.

அதற்கு பதிலளித்த நடிகர் சித்தார்த், நான் ரொம்ப ரொமான்டிக்கான ஆள். ரொம்ப சார்ட் ஹார். தனிமையா இருக்கக்கூடியவன். இந்த கேள்விக்கான பதில் என்னனா இப்போ என் இதயத்தில நிறைய காதல் உள்ளது. அந்த காதல் அனைத்தும் சரியான இடத்தில் இருக்கு. அவ்வளவுதான் நான் சொல்லுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Siddharth, Actress Aditi Rao Hydari