90களில் நிறைய தமிழ் படங்களில் ஹீரோவாக நடித்திருந்த சரவணன் பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் துவங்கினார். பாலாவின் இயக்கத்தில் சூர்யாவின் நந்தா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த சரவணனுக்கு அமீரின் பருத்திவீரன் திருப்புமுனையாக அமைந்தது.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சரவணன், நிகழ்ச்சியில் பேசிய தவறான கருத்துக்களால் பாதியில் வெளியேற்றப்பட்டார். கடந்த வருடம் இவரது நடிப்பில் வெளியான 'கார்கி' படம் பாராட்டுக்களை குவித்தது. தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த்துடன் இணைந்து ஜெயிலர் படத்தில் நடித்துவருகிறார்.
இந்த நிலையில் சென்னை அருகே முகலிவாக்கம் பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனக்கு ஒதுக்கப்பட்ட கார் பார்க்கிங் இடத்தை அபகரிப்பு செய்வதாகவும், போரூரில் அளிக்கப்பட்ட புகார் மீது ஆறு மாதமாக நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறி சிறு குறு தொழில் துறை அமைச்சர் தாமோ அன்பரசன் மனு அளித்து உதவியை நாடினார்.
இதனையடுத்து நடிகர் சரவணனின் மனைவி சூர்யா ஸ்ரீ என்பவர் தலைமைச் செயலகத்தில் முதல்வரின் தனிப்பிரிவில் புகார் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தனது நகைகளை விற்று வாங்கிய வீட்டை விட்டு தன்னை வெளியே போகச் சொல்வதாகவும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்துவருவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், என்னை காதலித்து கல்யாணம் செய்தார். பருத்தி வீரனுக்கு முன்பு அவரிடம் ஒன்றுமே இல்லை. நான் சம்பாதித்து அவரைப் பார்த்துக்கொண்டேன். எனக்கு விவாகரத்து கொடுக்காமல் தற்போது வேறுபெண்ணுடன் வாழ்ந்துவருகிறார். அவர் சொன்ன முகலிவாக்கம் இடத்தில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை.
நான் சம்பாதித்த பணத்தில் அவர் பெயரில் வாங்கினேன். அது தான் என் தவறு. இந்த வீட்டுக்காக வாங்கிய கடனுக்கு இஎம்ஐ கட்டி வருகிறேன். எனக்கு பிரச்னை வந்தாலும் சரவணன் தான் காரணம். இப்போது என் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bigg Boss Tamil