கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த 15 வயது ஹிதேந்திரன் விபத்தில் சிக்கினார். இரண்டு நாட்களுக்கு பிறகு மூளைச்சாவு அடைந்தார். அவரது இதயம் அபிராமி என்ற சிறுமிக்கு பொறுத்துவதற்காக தேனாம்பேட்டையிலிருந்து ஜெஜெ நகருக்கு அதிவிரைவில் எடுத்து செல்லப்பட்டது. இதனை செய்வதர் மோகன் என்ற காவலர் உதவினார்.
இந்த நிகழ்வுக்கு பிறகு தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது. இதனை அடிப்படையாகக் கொண்டு மலையாளத்தில் டிராஃபிக் என்ற படம் கடந்த படம் 2010 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் தமிழில் சென்னையில் ஒரு நாள் என்ற பெயரிலும், ஹிந்தியில் டிராஃபிக் என்ற பெயரிலும் வெளியானது. ஹிந்தி பதிப்பை மலையாளத்தில் இயக்கிய ராஜேஷ் பிள்ளை என்பவரே இயக்கியிருந்தார். இந்தப் படம் வெளியாகும் முன்பே உடல் நலக்குறைவால் இறந்துபோனார்.
தமிழில் சென்னையில் ஒருநாள் படத்தில் சரத்குமார், சேரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றியைப் பதிவுசெய்தது. இந்தப் படம் வெளியாகி 10 வருடங்களாகும் நிலையில் இந்தப் படத்துக்கு மூல காரணமான சம்பவத்தில் பெரிதும் உதவிய மோகன் என்பவரை சந்தித்தது குறித்து நடிகர் சரத்குமார் பதிவிட்டிருக்கிறார்.
இதையும் படிக்க | ''வேறு பொண்ணோட வாழ்ந்துட்டு இருக்காரு'' - சரவணனின் மனைவி பகீர் குற்றச்சாட்டு
29.03.2013 - சென்னையில் ஒரு நாள் திரைப்படம் வெளிவரக் காரணமான ஓர் உண்மை சம்பவத்தின் நாயகன் திரு.மோகன் அவர்களை, நேற்றைய தினம் எனது THOR - ஐ அழைத்துக் கொண்டு நடைபயிற்சி சென்ற போது நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.
(1) pic.twitter.com/h9Gzq7bGes
— R Sarath Kumar (@realsarathkumar) May 12, 2023
அவரது பதிவில், ''29.03.2013 - சென்னையில் ஒரு நாள் திரைப்படம் வெளிவரக் காரணமான ஓர் உண்மை சம்பவத்தின் நாயகன் மோகனை, நேற்றைய தினம் எனது THOR - ஐ அழைத்துக் கொண்டு நடைபயிற்சி சென்ற போது நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். 20.09.2008 - திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த 15 வயது ஹிதேந்திரன் விபத்துக்குள்ளாகி, துரதிர்ஷ்டவசமாக மூளைச்சாவு அடைந்ததில் அவரின் இதயத்தை, அப்போதைய கூடுதல் கமிஷனர் (டிராபிக்) சுனில்குமார் உதவியுடன் தேனாம்பேட்டை அப்பல்லோவில் இருந்து ஜெ.ஜெ.நகருக்கு 75 நிமிடத்தில் கடக்கக்கூடிய தொலைவை 11 நிமிடங்களில் கடந்து இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவியவர் மோகன்.
உடலுறுப்பு தானத்தின் அவசியத்தை அழுத்தமாக, உணர்வுப்பூர்வமாக எடுத்துக்காட்டி, ஹிதேந்திரன், சிறுமி அபிராமி இப்பூவுலகை விட்டு நீங்கினாலும், நினைவில் நிற்பவர்கள். மனிதநேயம், மனதில் துணிவு கொண்டு அச்சமயம் உயிரைக்காத்த அனைவரும் உண்மை நாயகர்கள். அந்த வகையில், தற்போது நீலாங்கரை காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் திரு.மோகன் அவர்களை சந்தித்து உரையாடியதில் நெகிழ்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor sarath kumar