முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நடிகர் சல்மான் கானுக்கு வந்த மிரட்டல் மெயில்.. கொலைமிரட்டல் காரணமாக வீட்டிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

நடிகர் சல்மான் கானுக்கு வந்த மிரட்டல் மெயில்.. கொலைமிரட்டல் காரணமாக வீட்டிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

நடிகர் சல்மான் கான்

நடிகர் சல்மான் கான்

நடிகர் சல்மான் கானுக்கு மின்னஞ்சல் மூலம் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்த பாதுகாப்பு நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Mumbai, India

இந்தி நடிகர் சல்மான் கானுக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது இல்லத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 1998-ம் ஆண்டில் ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் அருகே படப்பிடிப்பில் கலந்துகொண்ட இந்தி நடிகர் சல்மான் கான், மானை வேட்டியாடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்நிலையில், சல்மான் கானின் அலுவலகத்துக்கு மோகித் கார்க் என்பவரின் பெயரில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. அதில், சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய், செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அண்மையில் அளித்த நேர்காணலை சல்மான் கான் பார்க்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை முடித்துக் கொள்ள கோல்டி பிராரை சந்தித்துப் பேச வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே பிஷ்னோய் அளித்த நேர்காணலில் மானை வேட்டையாடியதற்காக பிகானிரில் உள்ள தங்களது கோயிலுக்கு சென்று சல்மான் கான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால், சல்மான் கானை கொல்வதே தனது வாழ்க்கையின் லட்சியம் என்றும் கூறியுள்ளார்.

Also Read : மும்பையில் சூர்யா வாங்கிய வீட்டின் விலை இத்தனை கோடியா? ஆச்சரிய தகவல்

இந்த மின்னஞ்சல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, லாரன்ஸ் பிஷ்னோய், கனடாவைச் சேர்ந்த ரவுடி கோல்டி பிரார் உள்ளிட்ட 3 பேர் மீது மும்பையின் பந்த்ரா போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், மும்பையில் உள்ள சல்மான் கானின் இல்லத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: Bollywood, Salman khan