முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'இது எனது நன்றிக்கடன்' - ஹிஸ்டரி டிவியின் தி வயல் 18 ஆவணப் படம் குறித்து மனோஜ் பாஜ்பாய் நெகிழ்ச்சி

'இது எனது நன்றிக்கடன்' - ஹிஸ்டரி டிவியின் தி வயல் 18 ஆவணப் படம் குறித்து மனோஜ் பாஜ்பாய் நெகிழ்ச்சி

மனோஜ் பாஜ்பாயி

மனோஜ் பாஜ்பாயி

விஞ்ஞானிகள், முன்கள பணியாளர்கள் ஆகியோர் தங்களது உயிரை பணையம் வைத்து நமக்காக வேலை செய்தார்கள்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவின் கொரோனா தடுப்பு மருந்தின் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு ஹிஸ்டரி டிவி 18 தயாரித்த தி வயல் (The Vial) என்ற ஆவணப்படம் மக்களிடையே கவனத்தை ஈர்ததுள்ளது. இந்த ஆவணப் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய் விவரிக்கிறார். இவர் சூர்யாவின் அஞ்சான் படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களிடையே பரவலாக அறியப்படுகிறார். இவரது தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இந்த ஆவணப்படத்தில் பணியாற்றியது குறித்து பேசிய மனோஜ் பாஜ்பாய் நான் இந்த ஆவணப் படத்தில் இருக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் விரும்பினர். முன் கள பணியாளர்களுக்கு நான் செய்ய வேண்டிய நன்றிக் கடனாக உணர்ந்தேன். நாம் வீட்டில் பாதுகாப்பாக இருந்தபோது, ஆயிரக்கணக்கானோர் வெளியே நமக்காக வேலை செய்ததை நினைவுகூர்கிறேன்.

top videos

    விஞ்ஞானிகள், முன்கள பணியாளர்கள் ஆகியோர் தங்களது உயிரை பணையம் வைத்து நமக்காக வேலை செய்தார்கள். இந்த ஆவணப்படம் அவர்களின் பணியை கொண்டாடுகிறது. அவர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். பெரும்பாலான மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள விரும்பினார்கள். அவர்களுக்கு கொரோனா ஊரடங்கு முடிவடைய வேண்டும். காரணம் வெளியே வந்து அவர்களது குடும்பத்துக்காக உழைக்க வேண்டும். என்றார்.

    First published:

    Tags: Covid-19