முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / “படுத்தபடியே என்னால முடியலடானு சொல்லிட்டு போனீங்களே“ - மனோபாலாவின் கடைசிப் பட இயக்குநர் உருக்கம்..!

“படுத்தபடியே என்னால முடியலடானு சொல்லிட்டு போனீங்களே“ - மனோபாலாவின் கடைசிப் பட இயக்குநர் உருக்கம்..!

மனோபாலாவுடன் இயக்குநர் கே.வி.கதிர்வேலு

மனோபாலாவுடன் இயக்குநர் கே.வி.கதிர்வேலு

Actor manobala death | மனோபாலாவின் மறைவு குறித்து அவர் கடைசியாக நடித்த படத்தின் இயக்குநர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் மனோபாலாவின் மறைவு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்கள் பலரும் அவருடன் பணியாற்றிய அனுபவங்களை தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக நகைச்சுவை நடிகர் சாம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் மனோபாலா கடைசியாக நடித்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், மனோபாலா சாரின் மறைவு மிகவும் வருத்தமாக உள்ளது. நண்பர் கதிர்வேலு இயக்கத்தில் யோகி பாபு நாயகனாக நடிக்கும் படத்தில் மனோ பாலா சாருடன் இணைந்து நடித்தேன். அவர் கடைசியாக நடித்து கடைசியாக பிறந்த நாள் கொண்டாடிய படமாக  அது இருக்கும்.. அவர் குடும்பத்தாருக்கு இரங்கல்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிக்க | ”ஒரு நகைச்சுவை கடைசியாய் அழவைத்துவிட்டது...” - மனோபாலா மறைவு குறித்து வைரமுத்து உருக்கம்..!

இந்த நிலையில் இப்படத்தின் இயக்குநர் கே.வி.கதிர்வேலு தனது பதிவில், கடைசியாக படப்பிடிப்பு தளம் வந்து படுத்தபடியே என்னால முடியலடா. மருத்துவமனைக்கு போய் வருகிறேன் என சொல்லிவிட்டு போனவரே கடைசி பிறந்த நாளை எம்மோடு கொண்டாடிவிட்டு இப்படி நடுவழியில் திண்டாட விட்டுவிட்டு போதல் சரியா? காலங்கள் கடந்தாலும் கடைசியாய் நடித்து எங்களோடு வாழ்ந்த கணங்கள் என்றும் எங்கள் நினைவில் நிலைத்து நிற்கும். என்று குறிப்பிட்டுள்ளார்.

top videos
    First published:

    Tags: Actor