முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அயோத்தி பட நடிகையுடன் இணையும் நடிகர் கவின்? - வெளியான புதிய அப்டேட்

அயோத்தி பட நடிகையுடன் இணையும் நடிகர் கவின்? - வெளியான புதிய அப்டேட்

நடிகர் கவின்

நடிகர் கவின்

பியார் பிரேமா காதல் என்ற படத்தை இயக்கிய இலன் இயக்கத்தில் கவின் அடுத்ததாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சீரியல்கள் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கவனம் ஈர்த்தவர் சீரியல் நடிகர் கவின். லிப்ட் திரைப்படத்தை தொடர்ந்து டாடா திரைப்படத்தில் கவின் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை அவரின் கல்லூரி நண்பரான கணேஷ் கே.பாபு என்பவர் இயக்கினார். இதில் கவினுடன் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்த அபர்ணா தாஸ், 'முதலும் நீ முடிவு நீ' ஹரிஷ் மற்றும் கே.பாக்யராஜ், வி.டி.வி.கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

சிம்பிள் கதையாக இருந்தாலும் புது கோணத்தில் எடுக்கப்பட்டதால் டாடா திரைப்படம் அனைவரின் கவனத்தை ஈர்த்தது. தற்போதைய சூழலில் இருக்கும் ஓர் இளைஞனின் பின்னணியில் டாடா திரைப்படத்தின் கதை எழுதப்பட்டது. கல்லூரி மாணவன் தொடங்கி, பொறுப்பான அப்பாவாக மாறும் தருணம் வரை காட்சிகள் இடம்பெற்று கவனம் ஈர்த்தது.

படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பொதுமக்கள் மட்டுமின்றி திரைப் பிரபலங்கள் பலரும் கவின் நடிப்பிற்கும் படக்குழுவினருக்கும் பாராட்டுகளை தெரிவித்தனர். திரையரங்கில் வெற்றியடைந்தது மட்டுமின்றி ஓடிடியிலும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கும் படத்தில் கவின் அடுத்ததாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அந்தப் படம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் பியார் பிரேமா காதல் என்ற படத்தை இயக்கிய இலன் இயக்கத்தில் கவின் அடுத்ததாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Also read... நான் என் மகனுக்கு சான்றிதழில் சாதி பெயரை குறிப்பிடவில்லை - நடிகை கயல் ஆனந்தி!

இந்நிலையில் இந்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தியிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இவர் சமீபத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான அயோத்தில் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை டிரைன்ட் ஆர்ட்ஸ் தயாரித்து இருக்கிறது. இயக்குனர் மந்திரமூர்த்தி படத்தை இயக்கியிருக்கிறார்.

மேலும், இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானவர் நடிகை ப்ரீத்தி அஸ்ரானி. இந்த படத்தில் இவருடைய நடிப்பு சிறப்பாக இருந்தது என்றும் ரசிகர்களிடையே பாராட்டை பெற்றுள்ளார். இவர் தொடர்ந்து கவினுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Kavin