முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தமிழ் மொழிக்கான திரைப்படம் பொன்னியின் செல்வன் - கார்த்தி!

தமிழ் மொழிக்கான திரைப்படம் பொன்னியின் செல்வன் - கார்த்தி!

கார்த்தி

கார்த்தி

தமிழ் மொழிக்கான திரைப்படம் பொன்னியின் செல்வன் என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் நாளை வெளியாக உள்ள நிலையில் நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, நடிகைகள் திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சோபிதா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் பற்றி சில விஷயங்களையும், நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர்.

அதில் நடிகர் கார்த்தி பேசுகையில், நிறைய பேர் நடிக்க ஆசைப்பட்ட கதாபாத்திரத்தில் நான் நடித்து முடித்தது மகிழ்ச்சி. இதுவரை பொன்னியின் செல்வன் எங்களுடையது, இனி அது உங்களுடைய படம் என தெரிவித்தார்.  மேலும் தமிழை பறைசாற்றும் படமாக பொன்னியின் செல்வன் இருக்கும்.  ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு படம் சொல்லிக் கொள்ளும் அளவில் இருக்கின்றது.  அந்த வரிசையில் தமிழுக்கான படமாக பொன்னியின் செல்வன் இருக்கும் என தெரிவித்தார்.

மேலும் மணிரத்னம் இந்த படத்தை ரசித்து ரசித்து எடுத்தார். பொன்னியின் செல்வன் புத்தகத்தை படிக்காத இந்த காலத்து பசங்களும் கொண்டாடும் விதமாக எடுக்க வேண்டும் என்று நினைத்தார் என தெரிவித்தார்.

அவரை தொடர்ந்து பேசிய நடிகர் விக்ரம், பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு 19, 20 வயது இளைஞர்கள் வரவேற்பு கொடுப்பதை பார்க்கையில் சந்தோஷமாக உள்ளது. ஒரு படத்தில் மூன்று நடிகர்கள் இருந்தால் ஒரு போட்டி இருக்க வேண்டும், பொறாமை இருக்க வேண்டும். ஆனால் இந்த படத்தில் எங்களுக்குள் அந்த மாதிரி எதுவும் இருந்ததில்லை. மிக மகிழ்ச்சியுடன் பணியாற்றினோம். இந்த திரைப்படம் அனைவரும் பறைசாற்றும் படமாக இருக்கும் என பேசினார்.

Also read... விஜய்யுடன் டின்னர் டேட்டிங் சென்ற நடிகை தமன்னா... வைரலாகும் வீடியோ!

அதேபோல் இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜெயம் ரவி,  மனம் நிறைந்த மகிழ்வுடன் இருக்கிறேன்.  கடுமையான உழைப்பை அனைவரும் கொடுத்தோம். அதற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு சந்தோஷத்தை கொடுக்கிறது என தெரிவித்தார். அதே போல் திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா உள்ளிட்டோர் பொன்னியின் செல்வன் திரைப்படம் தங்களுக்கு கிடைத்தது மகிழ்ச்சி. எப்போதும் இந்த கதாபாத்திரத்தையும் படத்தையும் மறக்க மாட்டோம் என தெரிவித்தனர்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Ponniyin selvan