முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Video: நடிகர் விஜய்யின் 'தளபதி 68' - மேடையில் உறுதி செய்த ஜீவா - வைரலாகும் வீடியோ

Video: நடிகர் விஜய்யின் 'தளபதி 68' - மேடையில் உறுதி செய்த ஜீவா - வைரலாகும் வீடியோ

விஜய் - ஜீவா

விஜய் - ஜீவா

நடிகர் விஜய்யின் தளபதி 68 படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிக்கவிருப்பதாக ஜீவா பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் லியோ படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் விஜய் - திரிஷா இருவரும் லியோ படத்துக்காக ஜோடி சேர்ந்திருக்கின்றனர். மேலும் முக்கிய கதாப்பாத்திரங்களில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இதனையடுத்து விஜய்யின் 68வது படம் குறித்து கடந்த சில நாட்களாக பல்வேறு தகவல்கள் பரவிவருகின்றன. இவரது 68வது படத்தை அட்லி இயக்கப்போகிறார் என்றும் தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் மல்லினேனி இயக்கப்போகிறார் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க | வேற லெவல் கெட்டப்.. புது லுக்குக்கு மாறிய லெஜண்ட் சரவணன் - வைரலாகும் போட்டோ

இந்த நிலையில் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவன தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரியின் மகனும் நடிகருமான ஜித்தன் ரமேஷ் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், லியோ படத்துக்கு பிறகு நடிகர் விஜய்யின் படத்தை எங்கள் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிக்க அதிக வாய்ப்பிருக்கிறது. தற்போது நடிகர் விஜய் நடிக்கும் படத்துக்கான கதையைக் கேட்டு வருகிறோம் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த விழா ஒன்றில் கலந்துகொண்ட ஜீவாவிடம் பத்திரிகையாளர் ஒருவர் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படத்தில் விஜய் நடிப்பாரா என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த ஜீவா, ''நிச்சயம் நடிப்பாரு. ஒரு வாரத்துக்கு முன்னதாக நடிகர் விஜய்யை இது தொடர்பாக மீட் பண்ணாங்க. அப்போ விஜய் சாரே நான் படம் பண்றேனு சொல்லியிருக்காரு. நானும் அதுல நடிக்கிறதுக்காக எங்க அப்பாவ இப்போவே கேட்டுட்டு இருக்கேன். 100வது படத்துல மேக்ஸிமம் விஜய் சார் தான் நடிப்பாரு'' என்றார்.

top videos

    சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்த, பூவே உனக்காக, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், திருப்பாச்சி, ஜில்லா உள்ளிட்ட படங்கள் பெரும் வெற்றிபெற்றிருப்பதால் தளபதி 68 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    First published:

    Tags: Actor Thalapathy Vijay