முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இந்த பொன்னியின் செல்வன் நடிகர் யாரென்று தெரிகிறதா? - சர்ப்ரைஸ் காத்திருக்கு

இந்த பொன்னியின் செல்வன் நடிகர் யாரென்று தெரிகிறதா? - சர்ப்ரைஸ் காத்திருக்கு

நடிகர் ஜெயராம்

நடிகர் ஜெயராம்

பொன்னியின் செல்வன் 2 படத்தில் காலமுகன் தோற்றத்தில் நடிகர் ஜெயராம் இருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பல்வேறு இடங்களில் நடக்கும் பொன்னியின் செல்வன் 2 பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் கலந்துகொண்டு படத்தை மக்களிடையே பிரபலப்படுத்திவருகின்றனர். அந்த வகையில் தற்போது திருச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் இயக்குநர் மணிரத்னம், நடிகர் விக்ரம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, திரிஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், நந்தினியாக ஐஸ்வர்யா ராய், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத் தேவனாக கார்த்தி, சுந்தர சோழனாக பிரகாஷ் ராஜ், குந்தவையாக திரிஷா, வானதியாக ஷோபிதா, பெரிய பழுவேட்டையராக சரத்குமார், சின்ன பழுவேட்டையராக பார்த்திபன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
 
View this post on Instagram

 

A post shared by Jayaram (@actorjayaram_official)இதையும் படிக்க | பிரபல காமெடி நடிகர் மரணம் - சோகத்தில் திரையுலகம்

மேலும் ஆழ்வார்கடியான் நம்பி வேடத்தில் ஜெயராம் நடித்திருக்கிறார். இந்த நிலையில் நடிகர் ஜெயராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காலமுகன் தோற்றத்தில் இருக்கும் படத்தை பகிர்ந்திருக்கிறார். அடையாளமே தெரியவில்லை என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

top videos

    மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வருகிற 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    First published:

    Tags: Ponniyin selvan