முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / “நல்லா இருந்தாரு... எதிர்பாராத நேரத்துல திடீர்னு இப்படி ஆகிடுச்சு..” - மனோபாலா மகன் ஹரீஷ்

“நல்லா இருந்தாரு... எதிர்பாராத நேரத்துல திடீர்னு இப்படி ஆகிடுச்சு..” - மனோபாலா மகன் ஹரீஷ்

மனோபாலாவின் மகன் ஹரிஷ்

மனோபாலாவின் மகன் ஹரிஷ்

Actor manobala death | இயக்குநரும் நடிகருமான மனோபாலா மகன் ஹரீஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இயக்குநரும் நடிகருமான மனோபாலா கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இளையராஜா, பாரதிராஜா, வைரமுத்து போன்றோர் மனோபாலாவின் மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்தனர். மேலும் மணிரத்னம், பி.சி.ஸ்ரீராம் போன்றோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். மனோபாலாவின் இறுதி சடங்கு நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க |  ”ஒரு நகைச்சுவை கடைசியாய் அழவைத்துவிட்டது...” - மனோபாலா மறைவு குறித்து வைரமுத்து உருக்கம்..!

இந்த நிலையில் அவரது மகன் ஹரிஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, ''என்னோட பெயர் ஹரிஷ் மனோபாலா. உங்க எல்லோருக்குமே தெரியும் எங்க அப்பா இந்த வருட துவக்கத்தில் இருந்தே உடல்நிலை சரியில்லாம இருந்தார்.

இதயப் பிரச்னை இருந்தது. மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தோம், நன்றாக தேறிவந்தார். கடைசி ஒரு வாரமாக அவரது உடல் நிலை சரியில்லை. நல்லா நடந்து பிஸியோ எல்லாம் பண்ணிட்டு இருந்தார். இன்று திடீரென இறந்துவிட்டார். நாங்கள் எதிர்பாராத நேரத்தில் இது நடந்திருச்சு'' என்று தெரிவித்தார்.

top videos
    First published:

    Tags: Actor, Death