முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / VIDEO: மனோபாலாவின் இறுதி தருணங்கள் - தந்தைக்காக பாடல் பாடிய மகன் - கண்கலங்க வைக்கும் வீடியோ

VIDEO: மனோபாலாவின் இறுதி தருணங்கள் - தந்தைக்காக பாடல் பாடிய மகன் - கண்கலங்க வைக்கும் வீடியோ

மனோபாலா - ஹரிஷ்

மனோபாலா - ஹரிஷ்

நடிகர் மனோபாலாவின் கடைசி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இயக்குநரும் நடிகருமான மனோபாலா கல்லீரல் பிரச்னை காரணமாக மருத்துவ சிகிச்சை எடுத்துவந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 3 ஆம் தேதி திடீரென மரணமடைந்தார். தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர் தயாரிப்பாளர் பன்முகம் கொண்டவர். அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மனோபாலாவுடன் கடைசியாக அவரது குடும்பத்தினர் செலவழித்த நிமிடங்களை அவரது யூடியூப் பக்கத்தில் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது. எப்பொழுதும் மிகவும் கலகலப்பாக பேசக் கூடிய மனோபாலா இந்த வீடியோவில் இருக்கும் நிலை ரசிகர்களை கண்கலங்க வைக்கிறது.

' isDesktop="true" id="970382" youtubeid="VKR1SWxrYD0" category="cinema">

இதையும் படிக்க | 31 ஆண்டுகளுக்குப் பிறகு... மீண்டும் இணைந்த பாரதிராஜா - இளையராஜா கூட்டணி...!

வீடியோவில் நினைவிழந்த நிலையில் இருக்கும் மனோபாலாவை சிரிக்க வைக்க அவரது மனைவி மற்றும் மகன் ஹரிஷ் உள்ளிட்டோர் முற்படுகின்றனர். அவரது உதவியாளர் குயில புடிச்சி கூண்டில் அடச்சி பாடலை பாடலாமா சார் எனக் கேட்கிறார். பின்னர் அவரது மகன் ஹரிஷ் அவருக்காக பாடல் பாடுகிறார். இந்த வீடியோ தற்போது அதிகம் கவனம் பெற்றுவருகிறது.

top videos
    First published:

    Tags: Actor, Sad