முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தனுஷ் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்... கேப்டன் மில்லர் ரிலீஸ் குறித்து வெளியான தகவல்!

தனுஷ் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்... கேப்டன் மில்லர் ரிலீஸ் குறித்து வெளியான தகவல்!

கேப்டன் மில்லர்

கேப்டன் மில்லர்

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் தனுஷ் தற்போது இயக்குநர் அருண் மாதேஸ்வரனுடன் 'கேப்டன் மில்லர்' படத்திற்காக கைகோத்துள்ளார். குற்றாலத்தில் இதன் படப்பிடிப்பை தனுஷ் மீண்டும் தொடங்கியுள்ளதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. 'கேப்டன் மில்லர்' திரைப்படம் 1930-40 களில் நடக்கும் கதை எனக் கூறப்படுகிறது. இந்தப் படத்திற்காக தென்காசி மாவட்டத்தின் வனப்பகுதியில் ஒரு செட் அமைத்துள்ளனர். தனுஷ் மற்றும் 'கேப்டன் மில்லர்' படத்தின் மற்ற நட்சத்திரங்கள் முன்னதாக டிசம்பரில் ஒரு ஷெட்யூலை முடித்தனர். பின்னர் தங்கள் குடும்பத்துடன் பண்டிகை நாட்களை கொண்டாடும் விதத்தில் ஓய்வு எடுத்தனர்.

'கேப்டன் மில்லரின் படப்பிடிப்பை தனுஷ் இப்போது மீண்டும் தொடங்கியுள்ளார். இந்த பீரியடிக் த்ரில்லர் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார்.

இந்தியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையிலான போரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருவம் இந்த படத்தில் ஏராளமான துப்பாக்கி குண்டுகள் மற்றும் குண்டுவெடிப்புகளுடன் படக்குழு பெரிய அளவில் காட்சியை பதிவு செய்து வருகிறது.

இந்நிலையில் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பட குழுவினர் இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

top videos
    First published:

    Tags: Actor Dhanush