முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ''மரணம்கூட நேரலாம், தயவுசெய்து நடிகரை கல்யாணம் பண்ணிக்காத'' - மனைவிக்கு நடிகர் பாலா அறிவுரை

''மரணம்கூட நேரலாம், தயவுசெய்து நடிகரை கல்யாணம் பண்ணிக்காத'' - மனைவிக்கு நடிகர் பாலா அறிவுரை

மருத்துவமனையில் மனைவியுடன் நடிகர் பாலா

மருத்துவமனையில் மனைவியுடன் நடிகர் பாலா

எனக்கு 2 அல்லது 3 நாட்களில் மிக முக்கிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவிருக்கிறது. மரணம் கூட நேரலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழில் அன்பு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பாலா. இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பியான இவர் வீரம், தம்பி, அண்ணாத்த உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார், மேலும் மலையாளத்தில் தொடர்ச்சியாக நடித்துவருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் கல்லீரல் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் பாலா அனுமதிக்கப்பட்டார்.

தம்பியைக் காண இயக்குநர் சிறுத்தை சிவா மருத்துவனைக்கு சென்று நலம் விசாரித்தார். இந்த நிலையில் சமீபத்தில் பாலா தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் தனது மனைவியுடன் திருமண நாளைக் கொண்டாடிய அவர், பின் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது பேசிய அவர், இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் தனக்கு முக்கிய அறுவை சிகிச்சை நடைபெறுவிருப்பதாகவும் மரணம் கூட நேரலாம் என்றும் தெரிவித்தார்.

அவர் பேசியதாவது, நான் மருத்துவமனையில் இருக்கிறேன். உங்கள் அனைவரது பிரார்த்தனையால் இந்த நிலையில் இருக்கிறேன். எனக்கு 2 அல்லது 3 நாட்களில் மிக முக்கிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவிருக்கிறது. மரணம் கூட நேரலாம். ஆனால் உங்கள் அனைவரது பிரார்த்தனையால் பிழைத்துக்கொள்ளவும் அதிக வாய்ப்பு இருக்கிறது.

நம்பிக்கையுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். இன்று எங்களது இரண்டாவது ஆண்டு திருமண நாள். என் மனைவி எலிசபெத் இன்த நாளைக் கொண்டாட விரும்பினார். பிறப்போ, இறப்போ கடவுள் முடிவெடுப்பார் என்றார். பின்னர் தன் மனைவியைப் பார்த்து, எனக்கு ஏதாவது நேர்ந்தால் நீ நடிகரை திருமணம் செய்துகொள்ளாதே. டாக்டரை திருமணம் செய்துகொள் என்றார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு அம்ருதா சுரேஷைக் காதலித்து திருமணம் செய்துகொண்ட பாலா, அவரை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். பின்னர் கடந்த 2021 ஆம் ஆண்டு எலிசபெத் உதயன் என்ற டாக்டரை மறுமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Actor, Health