அருள்நிதி நடித்துள்ள கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் இந்த வாரம் வெளியாகியுள்ளது. அந்தப் படம் எப்படி இருக்கிறது? என்ன சொல்கிறது என்பதை பார்க்கலாம்.
ஜோதிகா நடிப்பில் வெளியான ராட்சசி திரைப்படத்தை இயக்கிய சை.கெளதம ராஜ் கழுவேத்தி மூர்க்கன் படத்தை இயக்கியுள்ளார். இதில் அருள்நிதி, சந்தோஷ் பிரதாப், துஷாரா விஜயன், முனிஸ்காந்த் ராமதாஸ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். அதேபோல் டி.இமான் இசையமைத்துள்ளார்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை அடிநாதமாக எடுத்துகொண்டு கழுவேத்தி மூர்க்கன் படத்தை எடுத்துள்ளனர். இரு வேறு சமூகத்தை சேர்ந்த இரண்டு நண்பர்கள். அவர்கள் வாழ்க்கையில் சாதியின் தாக்கமும், அதிகார அரசியலும் எந்த அளவுக்கு விளையாடுகிறது என்பதை விரிவாக படமாக்கியுள்ளனர்.
சிறுவயது முதலே அருள்நிதியும், சந்தோஷ் பிரதாபும் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். உயர்ந்த சமூகங்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் சந்தோஷ் பிரதாப் சமூகத்தை தள்ளி வைத்து வருகின்றனர். ஆனால் அருள்நிதி, நண்பனுக்காக எப்போதும் துணை நிற்கிறார். நண்பனை யாராவது இழிவு படுத்தினாலோ அடித்தாலோ அவர்களை துவசம் செய்கிறார். ஒரு கட்டத்தில் தன் சமூக இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக குரல் கொடுத்து வந்த சந்தோஷ் பிரதாப் கொல்லப்படுகிறார். அந்த பழி அருள்நிதி மீது விழுகிறது. இதற்கு பின் என்ன ஆனது? கொலையை அருள்நிதி செய்தாரா? அதற்கு பின் இருக்கும் சூழ்ச்சி மற்றும் அரசியல் என்ன? என்பதை திரைக்கதை மூலம் நகர்த்தியுள்ளார் இயக்குனர்.
சாதி ஆதிக்கமும், பதவி அரசியலும் என்னவெல்லாம் செய்யும் என்பதை சொல்லியிருக்காங்க. அதற்கு சில காட்சிகளும், வசனங்களும் உறுதுணையா இருக்கு. எந்த சமூகமாக இருந்தாலும் அதுலயும் உட்பிரிவில் ஏற்றத்தாழ்வு இருக்கு, உங்களுடைய எதிரி யாரென தெரியல, கல்வி மட்டும்தான் உன்னை உயர்த்தும் என்பதை திரைக்கதையோட்டத்துடன் சொல்லியிருக்கார் இயக்குனர் கெளதம ராஜ்.
நடிகர்களை பொறுத்தவரை, ஒவ்வொருவரும் தங்களுடைய கதாபாத்திரங்களை கச்சிதமா நடிச்சி கொடுத்திருக்காங்க. குறிப்பா, மூர்க்கசாமி கதாபாத்திரத்தில் அருள்நிதியும், பூமி கதாபாத்திரத்தில சந்தோஷ் பிரதாப்பும் பொருந்தி போறாங்க. அதேபோல் முனிஷ்காந்த், சரத் லோஹிதஸ்வா கதாபாத்திரங்கள் ரசிக்க வைக்கின்றன.
Also read... டோவினோவின் 2018 என்ற மலையாளப் படத்தின் தமிழ் டப் ரிலீஸானது!
இந்தப் படத்துடைய முதல் பாதி காட்சிகள் பெரும்பாலும் ஒருவித நாடக தன்மையுடன் இருப்பது போல் தோன்றுகிறது. மேலும் படத்தில் காதல் காட்சிகள் எதற்கு, காதலி எதற்கு என்ற கேள்வியும் எழுகிறது. அந்த கதாபாத்திரம் படத்தில் இல்லை என்றாலும் எந்த பாதிப்பும் இருந்திருக்காது. படத்தில் சொல்ல முயற்சித்திருக்கும் கருத்துகள், காட்சிகளாகவே கடந்து செல்கிறதே தவிர, பார்பவர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த தவறுகிறது. இரண்டாம்பாதி முதல் பாதியைவிட நன்றாக இருந்தாலும், அதில் ஏராளமான லாஜிக் மீறல்கள் உள்ளன. மேலும் டி.இமான் பின்னணி இசை படத்திற்கு உதவ முயற்சித்திருக்கு. ஆனா அந்த இசையும் இமானுடைய முந்தைய படங்கள்ல கேட்டது போன்ற உணர்வை கொடுத்து விடுகிறது. ஆனால் படம் முழுவதும் வரும் சின்ன சின்ன சஸ்பென்ஸ், கதாபாத்திரங்களுடைய வடிவமைப்பு, எதிர்பாராத கிளைமேக்ஸ் ஆகியவை படத்திற்கு ப்ளஸ்.
இதே கதையுடன் சமீபத்தில் வெளியான இராவண கோட்டம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறல. ஆனா இந்தப் படத்தில் நிறைகளும் குறைகளும் சமமாக இருந்தாலும், பரவால என சொல்ல வைக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Arulnithi, Movie review