முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சாதி அரசியல் பேசும் அருள்நிதியின் ‘கழுவேத்தி மூர்க்கன்’ - வெளியானது ட்ரெய்லர்!

சாதி அரசியல் பேசும் அருள்நிதியின் ‘கழுவேத்தி மூர்க்கன்’ - வெளியானது ட்ரெய்லர்!

கழுவேத்தி மூர்க்கன்

கழுவேத்தி மூர்க்கன்

Kazhuvethi Moorkkan | அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கடந்த 2019-ம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான 'ராட்சசி' படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சை.கௌதமராஜ். இவர் தற்போது 'கழுவேத்தி மூர்க்கன்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார்.  டி. இமான் இசை அமைத்துள்ளார். யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒலிம்பியா மூவிஸ் சார்பில், அம்பேத்குமார் தயாரித்துள்ளார்.

இப்படம் வரும் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லரின் மூலம் கிராமத்து பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள சாதி குறித்து அழுத்தமாக பேசுகிறது என்பது தெரிகிறது.

' isDesktop="true" id="984529" youtubeid="hwjOTU1bcTM" category="cinema">

நன்றி: Think Music India.

top videos
    First published:

    Tags: Arulnithi, Tamil Movies Trailer