வலிமை திரைப்படத்திற்குப் பின்னர் நடிகர் அஜித் குமார், மகிழ்திருமேனி இயக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இசை வெளியீட்டு விழா, வெற்றிக்கொண்டாட்டம் என பொது நிகழ்ச்சிகளை அஜித் முற்றிலுமாக புறக்கணித்தாலும், பொதுவெளிகளில் அவ்வப்போது அவரின் நடவடிக்கைகள் கவனம் பெற்று டிரென்டாவது வழக்கம்.
அப்படித்தான், சமீபத்தில் கைக்குழந்தையுடன் இருந்த ஒரு பெண்ணுக்கு விமான நிலையத்தில் அஜித் குமார் செய்த உதவி பேசுபொருளாக மாறியுள்ளது. அஜித் பிரிட்டன் நாட்டிற்கு பயணித்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பெண்ணின் கணவர் இது தொடர்பாக நெகிழ்ச்சிப் பதிவை பகிர்ந்துள்ளார்.
இன்ஸ்டா பதிவில் அவர் கூறியதாவது, "என் மனைவி, கிளாஸ்கோவில் இருந்து சென்னை வந்தார். எங்கள் 10 மாத குழந்தையுடன் தனியாக அவர் பயணம் செய்தார். அப்போது லண்டனில் உள்ள ஹீத்ரு விமான நிலையத்தில் நடிகர் அஜித்தை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. எனது மனைவி கேபின் சூட்கேஸ் மற்றும் குழந்தையை வைத்துக்கொண்டு ஒரு பையையும் சுமந்து வந்திருந்தார்.
மனைவியின் விருப்பத்தின்படி அஜித் அவருடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்ததார். அத்தோடு நிற்காமல் என் மனைவி தனியாக வந்திருப்பதைப் புரிந்துகொண்டு, அவள் பையையும் எடுத்துச் சென்று உதவினார். என் மனைவி அதை மறுத்து பார்த்தார். அதற்கு அஜித், “பரவாயில்லை. எனக்கும் 2 குழந்தைகள் இருக்காங்க. அதனால் உங்கள் சூழலை உணரமுடியும்” என்று சொல்லிவிட்டு, என் மனைவியின் இருக்கைக்கு மேலே அந்த சூட்கேஸ் பைகள் வைக்கப்பட்டதை உறுதி செய்து அதன் பின்னர்சான் சென்றார்.
இதையும் படிங்க: தென்னிந்திய சினிமாவின் முதல் நட்சத்திர ஜோடி.. நாடகம் டூ சினிமா என சாதித்த தம்பதி!
அஜித்துடன் வந்த ஒரு நபர் தலைவா நீங்க எதற்கு, நான் எடுத்து செல்கிறேன் என்று கேட்டு பார்த்தார். அதையும் அஜித் மறுத்துவிட்டார் மிகப்பெரிய ஆளுமை கொண்ட நபர் இப்படி நடந்துகொண்டது வியக்க வைத்தது” என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ajith, Ajithkumar, Viral News