முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அஜித் குமாரின் "V" சென்டிமென்டும் விடாமுயற்சியும்..!

அஜித் குமாரின் "V" சென்டிமென்டும் விடாமுயற்சியும்..!

நடிகர் அஜித்

நடிகர் அஜித்

Actor Ajithkumar Birthday | அஜித் சிவா ஆகியோர் இணைந்த அடுத்தடுத்த திரைப்படங்களான வேதாளம்,விவேகம், விசுவாசம் உள்ளிட்ட திரைப்படங்கள் வி என்ற எழுத்தில் தொடங்குவது போல பெயரிடப்பட்டது

  • Last Updated :
  • Chennai, India

சிறிது காலம் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த நடிகர் அஜித் குமாரின் V சென்டிமென்ட் மீண்டும் விடாமுயற்சி மூலம் திரும்ப வந்துள்ளது.

ஒரு திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை, படக்குழு உள்ளிட்டவைக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதோ அதே அளவு படத்தின் தலைப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. படத்தின் தலைப்பிற்காகவே பல மாதங்களை ஒவ்வொரு பட குழுவினரும் செலவிடுகின்றனர்.

அந்த வகையில் நடிகர் அஜித்தை பொருத்தவரையில் 2014 ஆம் ஆண்டு சிவா இயக்கத்தில் வெளியான வீரம் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு V என்ற எழுத்தில் துவங்குவது போலவே பெரும்பாலான படத்திற்கு பெயர் இடப்படுகிறது. அஜித் சிவா ஆகியோர் இணைந்த அடுத்தடுத்த திரைப்படங்களான வேதாளம்,விவேகம், விசுவாசம் உள்ளிட்ட திரைப்படங்கள் வி என்ற எழுத்தில் தொடங்குவது போல பெயரிடப்பட்ட திரைப்படங்களில் விவேகம் தவிர்த்து எஞ்சிய படங்கள் பெரும் வர்த்தக வெற்றியும் ஈட்டியது.

இதையும் படிங்க: நடிகர் அஜித்தை பற்றி பலரும் அறிந்திடாத 10 தகவல்கள்...

இதன் காரணமாக வி என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்கள் அஜித்திற்கு பொருத்தமாக உள்ளதாக தமிழ் சினிமாவில் ஒரு நம்பிக்கை பரவியது ஏற்கனவே அஜித் நடிப்பில் வெளியான வான்மதி, வாலி ஆகிய திரைப்படங்களின் வெற்றிக்களும் இதற்கு காரணமாக பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான பிங்க் திரைப்படத்தின் ரீமேக்கிற்கு நேர்கொண்ட பார்வை என பெயரிடப்பட்டது, இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியில் பெரும் வரவேற்புகளை பெற்ற நிலையில் வர்த்தக ரீதியில் விசுவாசம் திரைப்படத்தின் சாதனைகளை முறியடிக்க முடியவில்லை, இந்த நிலையில் உடனடியாக அஜித் நடித்த அடுத்த திரைப்படத்திற்கு வலிமை என பெயரிடப்பட்டது.

top videos

    இதன் காரணமாக அஜித் மீண்டும் வி சென்டிமென்ட்க்கு திரும்பி விட்டார் என கூறப்பட்டது. வலிமை திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித் வினோத் இணைந்த அடுத்த திரைப்படத்திற்கும் வி என்ற எழுத்திலேயே படத்தின் தலைப்பு எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துணிவு என படத்திற்கு பெயர் சூட்டப்பட்டது. துணிவு திரைப்படத்தின் வெற்றியோடு அஜித்தின் வி சென்டிமென்ட் முடிவுக்கு வந்து விட்டதாகவே எண்ணப்பட்ட நிலையில் தற்பொழுது மகிழ் திருமேனி இயக்கத்தில் புதிதாக அஜித் நடிக்கும் திரைப்படத்திற்கு விடா முயற்சி என பெயரிடப்பட்டுள்ளது, வி சென்டிமென்டில் அஜித்தின் விடாமுயற்சியே காட்டுகிறது.

    First published:

    Tags: Actor Ajith, Ajithkumar