முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நடிகர் அஜித்தின் தந்தை காலமானார்..!

நடிகர் அஜித்தின் தந்தை காலமானார்..!

நடிகர் அஜித் தந்தை காலமானார்

நடிகர் அஜித் தந்தை காலமானார்

actor ajithkumar father passed away | 3 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த அஜித்குமாரின் தந்தை இன்று காலமானார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். கடந்த மூன்று ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் சிகிச்சையில் இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை 3:15 மணி அளவில் காலமானார்.

நடிகர் அஜித்குமார் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவருடைய தந்தை சுப்பிரமணியம் - தாய் மோகினி சென்னையில் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில், அஜித்தின் தந்தை சுப்பிரணியம் கடந்த 2020ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். 3 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

top videos

    இந்த சம்பவம் திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெசன்ட் நகரில் உள்ள அஜித்தின் வீட்டில் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    First published:

    Tags: Actor Ajith