அஜித் குமார் அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்கவிருக்கிறார். லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார். இந்தப் படத்தையடுத்து அஜித் உலக மோட்டார் பைக் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளார்.
விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தாமதமாவதால் நடிகர் அஜித் குமார் நேபாளம், மற்றும் பூட்டான் நாடுகளில் உலக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்கவிருப்பதால் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியிருக்கிறார்.
இந்த நிலையில் நடிகர் அஜித்தின் பயணித்த புகைப்படங்களைப் பகிர்ந்த அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா, அவர் பயணித்த இடங்களை குறிப்பிட்டு மேப் ஒன்றையும் பகிர்ந்திருக்கிறார். அதில், தன் படி இந்தியாவில் தெலங்கானா, மகாராஷ்டிரா, கொல்கத்தா, ராஜஸ்தான் டெல்லி, சண்டிகர், கார்கில் என பயணித்து பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு சென்றிருக்கிறார். பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சுரேஷ் சந்திரா பகிர்ந்திருக்கிறார்.
இதையும் படிக்க | யுவன் இசையில் விஜய் பாடிய பாடல் எது தெரியுமா ? ஆனா அந்தப் படத்துல விஜய் நடிக்கல
இந்த நிலையில் அஜித் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், ''அஜித்குமார் தனிப்பட்ட முறையில் வெளியிடும் அறிவிப்பு:
இந்த மேற்கோளை நான் நீண்ட காலமாக விரும்பி வாழ்ந்து வருகிறேன்: 'வாழ்க்கை ஒரு அழகான பயணம். அதன் எதிர்பாராத தருணங்கள், திருப்பங்கள் மற்றும் திறந்த பாதைகளைக் கொண்டாடுங்கள்'.
மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வெளிப்புறங்களில் எனது ஆர்வத்தை ஒரு தொழில்முறை முயற்சியாக மாற்றும் விதத்தில் ஏகே மோட்டோ ரைடு (AK Moto Ride) என்ற மோட்டார்சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை கொண்டு வந்திருக்கிறேன் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தியாவின் இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்புகளில் மட்டுமின்றி, அழகான சர்வதேச சாலைகளிலும் பயணம் மேற்கொள்ள ஆர்வமுள்ள ரைடர்ஸ், சாகச ஆர்வலர்கள் மற்றும் பயண விரும்பிகளுக்கு ஏகே மோட்டோ ரைடு சுற்றுப்பயணங்களை வழங்கும்.
பாதுகாப்பு மற்றும் சௌகரியத்தில் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் சுற்றுப்பயணங்கள் முழுவதிலும் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனை உறுதி செய்து, உன்னிப்பாக பராமரிக்கப்படும் சாகச சுற்றுலா சூப்பர் பைக்குகளை ஏகே மோட்டோ ரைடு வழங்கும். தொழில்முறை வழிகாட்டிகள், மோட்டார் சைக்கிள் சுற்றுப்பயணங்களின் நுணுக்கங்களை நன்கு அறிந்தவர்கள் மற்றும் உள்ளூர் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் பற்றிய விரிவான அறிவைக் கொண்டவர்கள் தொடக்கம் முதல் இறுதி வரை ரைடர்களுக்கு தடையற்ற மற்றும் அதிவேக அனுபவத்தை வழங்குவார்கள்.
வாழு வாழ விடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Ajith