முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இதனால் தான் அஜித்தின் ஏகே 62 பட அப்டேட் தாமதமாகிறதா? வெளியான காரணம்

இதனால் தான் அஜித்தின் ஏகே 62 பட அப்டேட் தாமதமாகிறதா? வெளியான காரணம்

அஜித் குமார்

அஜித் குமார்

மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கவிருக்கும் ஏகே 62 பட அப்டேட் தாமதமாவதற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் அஜித்தின் துணிவு கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியில் வெற்றிப் படமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அஜித் நடிக்கவுள்ள ஏகே 62 படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகிய நிலையில் இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கவிருப்பதாகவும் அனிருத் இசையமைக்கவிருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் இயக்குநர் விக்னேஷ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். அதில், தான் சொன்ன கதையின் இரண்டாம் பாதி தயாரிப்பாளர்களுக்கு பிடிக்கவில்லை என்றும் அதனை அவர்கள் மாற்ற சொன்னதாகவும் பேசியிருந்தார். இருப்பினும் அஜித் தரப்பில் அவருக்கு எவ்வித அழுத்தமும் கொடுக்கப்படவில்லை என்றும் பேசியிருந்தார்.

இதையும் படிக்க | என்னது! சூர்யாவின் கங்குவா படத்தின் பெயரில் ஏற்கனவே ரஜினி படமிருக்கிறதா? ஆச்சரியத் தகவல்

மேலும் விக்னேஷ் சிவன் தான் நினைப்பதிலிருந்து மாற மாட்டார் என்றும் அதனால் கதையில் மாற்ற செய்ய சொன்னதால் விலகியதாகவும் குறிப்பட்டிருக்கிறார்.

மற்றொரு பக்கம் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு மே 1 ஆம் தேதி இந்தப் படத்தின் அப்டேட் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஏகே 62 ஸ்கிரிப்டை நிறைவு செய்யும் பணியில் மகிழ் திருமேனி ஈடுபட்டுவருகிறாராம். விக்னேஷ் சிவன் விஷயத்தில் நடந்த தவறு இந்த முறை நடக்கக் கூடாது என தயாரிப்பு நிறுவனம் பொறுமையாக அறிவிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

top videos
    First published:

    Tags: Actor Ajith