நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகி இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
எந்த ஒரு கூட்டத்தில் ஒரு நடிகரின் பெயரைச் சொன்னால் கூட்டத்தினர் சத்தம் போடுவது நிற்கவே சில நிமிடங்கள் ஆகுமோ, ரசிகர் மன்றத்தை கலைத்த பின்னரும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த ஒரு நடிகராக தமிழ் சினிமாவில் அதிசயமாக வளர்ந்து நிற்பவர் எவரோ, அவர் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகி இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைகிறது.
அமராவதி என்ற திரைப்படத்தில் அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் அஜித் குமார் 1993 ஆம் ஆண்டு இதே நாளில் தமிழ் திரைகளில் அவதரித்தார். அன்றைய தினம் தமிழகம் அறிந்திருக்கவில்லை தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர் கூட்டத்தை கட்டிப்போடப்போகும் ஆதர்சன நாயகன் இவர் என்று.
செல்வா இயக்கத்தில் சோழா பொன்னுரங்கம் தயாரிப்பில் வெளியான அமராவதி திரைப்படம் ஓரளவுக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்ததோடு வசீகரமான முகத்திற்கு சொந்தக்காரர் என்ற பெயரை நடிகர் அஜித்குமாருக்கு பெற்று தந்தது.
பாலபாரதி இசையில் தாஜ்மஹால் தேவையில்லை தங்கமே தங்கமே பாடல் இந்த படத்திற்கான அடையாளமாக இன்னும் ரசிகர்கள் மனதில் நீடித்து நிலைத்து இருக்கிறது.
அமராவதி திரைப்படத்திற்கு பிறகு பாசமலர்கள் திரைப்படத்தில் நடித்திருந்த அஜித்குமார் மோட்டர் பைக் விபத்தில் சிக்கி பின்னர் பவித்ரா திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்குள் மறுபிரவேசம் செய்தார். இதன் பிறகு விஜயுடன் இணைந்து ராஜ பார்வையிலே மற்றும் வசந்த் இயக்கத்தில் ஆசை ஆகிய திரைப்படங்களில் அஜித் நடித்த ஆசை திரைப்படம் அஜித்துக்கு தமிழ் சினிமா நிலையான இடத்தை பெற்றுக் கொடுத்தது.
30 ஆண்டுகளில் 61 திரைப்படங்களில் நடித்து விட்ட அஜித்குமார் அதில் பாதிக்கும் மேல் பிளாக் பஸ்டர் திரைப்படங்களில் நடித்து தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.
நடிப்பதை தாண்டி நல்ல மனிதநேய பண்புகள் மூலம் தனக்கான ரசிகர் வட்டத்தை வளர்த்துக் கொண்ட நடிகர் அஜித்குமார் பைக் ரேசிங், துப்பாக்கி சுடுதல், புகைப்பட தொழில்நுட்பம், ஹெலிகாப்டர் தொழில்நுட்பம் என தனி ஆபத்தாலும் ரசிகர்களை வசீகரித்து வருகிறார்.
தமிழக அளவில் ரஜினிகாந்த் திரைப்படத்துடன் போட்டி போட்டு யாருமே அதிக வசூலை ஈட்ட முடியாது என்ற அச்சத்தை உடைத்து பேட்ட திரைப்படம் வெளியான அதே நாளில் விசுவாசம் திரைப்படத்தையும் வெளியிட்டு தமிழக அளவில் ரஜினிகாந்தின் வசூலை முந்தியது அஜித்தின் ஹிமாலய சாதனைகளில் ஒன்று.
Also read... குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி வாழ்க்கையில் நடந்த சோகம் - ஆறுதல் கூறும் ரசிகர்கள்!
நடிகர் விஜய் உடன் போட்டி நடிகராக கருதப்படும் அஜித் விஜயின் வாரிசு திரைப்படம் வெளியான அதே நாளில் தனது கடைசி திரைப்படமான துணிவு திரைப்படத்தை வெளியிட்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தி தான் என்பதை நிரூபிக்க தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறார்.
அஜித் நடிப்பில் மகிழ் திருமணி இயக்கத்தில் அடுத்து தயாராக உள்ள விடாமுயற்சி திரைப்படம் வசூலில் பல சாதனைகளைப் படைக்க காத்துக் கொண்டுள்ள நிலையில் இன்று தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக வளர்ந்து நிற்கும் அஜித், இன்றைய தினம் தான் திரையில் அறிமுகமானார் என்பது அஜித் ரசிகர்களுக்கு இந்த நாளை மேலும் சிறப்பான நாளாக மாற்றுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Ajith