முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சிவகார்த்திகேயனின் 'அயலான்' பட வீடியோ - ஆமீர்கானின் கமெண்ட் என்ன தெரியுமா?

சிவகார்த்திகேயனின் 'அயலான்' பட வீடியோ - ஆமீர்கானின் கமெண்ட் என்ன தெரியுமா?

சிவகார்த்திகேயன் - ஆமீர் கான்

சிவகார்த்திகேயன் - ஆமீர் கான்

சிவகார்த்திகேயனின் அயலான் பட கிளிம்ஸ் வீடியோவை ஆமீர் கான் புரொடக்சன்ஸ் நிறுவனம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சிவகார்த்திகேயன் நடிப்பில் நீண்ட ஆண்டுகளாக தயாரிப்பிலிருந்த அயலான் படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகிறது. ஏலியனுக்கும் மனிதனுக்கும் இடையேயான நட்பு தான் அயலான் படத்தின் கதை என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்திலிருந்து ஏலியனுடன் சிவகார்த்திகேயன் இடம்பெற்றிருந்த கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அயலான் படம் தொடர்பாக கேஜேஆர் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அயலான் படத்தின் தரத்தில் சமரசம் செய்ய விரும்பாத நாங்கள், படத்தின் சிஜிஐ காட்சிகளுக்கு பெரும் மெனக்கெடலுடன் பணிபுரிந்துள்ளோம். அயலான் ஒரு பான் இந்தியன் திரைப்படம். அதிக எண்ணிக்கையிலான சிஜிஐ காட்சிகள் கொண்ட படமாக இருக்கும்.

இதையும் படிக்க |  அட.. ரஜினிக்கு பிறகு கார்த்திக்குக்கு கிடைத்த பெருமை.. 'பொன்னியின் செல்வன் 2' கொடுத்த பெருமிதம் - வைரலாகும் புகைப்படம்!

படம் முழுவதும் வரும் வேற்று கிரக வாசி அனைவரும் விரும்பும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 4500க்கும் அதிகமான விஎஃப்எக்ஸ் காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ் ஆக்சன் படமாக அயலான் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

top videos

    இந்த நிலையில் ஆமீர் கான் புரொடக்சன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அயலான் கிளிம்ப்ஸ் வீடியோவைப் பகிர்ந்து, வெளியாகவிருக்கும் அயலான் படம் வெற்றிபெற உங்களுக்கு அன்பும் வாழ்த்துகளும் சிவகார்த்திகேயன் என்று குறிப்பிட்டுள்ளார்.

    First published:

    Tags: Aamir Khan, Sivakarthikeyan