முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'லவ் டுடே' பட ஹிந்தி ரீமேக் - ஹீரோவாக அறிமுகமாகும் ஆமிர்கான் மகன்?

'லவ் டுடே' பட ஹிந்தி ரீமேக் - ஹீரோவாக அறிமுகமாகும் ஆமிர்கான் மகன்?

பிரதீப் ரங்கநாதன் - ஆமிர் கான்

பிரதீப் ரங்கநாதன் - ஆமிர் கான்

லவ் டுடே ஹிந்தி ரீமேக்கில் ஆமிர் கானின் மகன் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கோமாளி படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே படம் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்திருந்த இந்தப் படம் 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இவானா நடிக்க, சத்யராஜ், ராதிகா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான இந்தப் படம் அங்கும் நல்ல வெற்றியைப் பதிவு செய்தது.

இதையும் படிக்க | பிச்சைக்காரன் 2 பட பாதிப்பா? - பிச்சைக்காரர்களுக்கு போர்வை, விசிறி வழங்கிய விஜய் ஆண்டனி

ஜுனைத் கான்

இந்த நிலையில் இந்தப் படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹிந்தியிலும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்தப் படத்தில் ஹீரோவாக அமீர் கானின் மகன் ஜுனைத் கான் நடிக்கவிருப்பதாகவும் அவருக்கு ஜோடியாக போனி கபூர் - ஸ்ரீதேவி தம்பதியின் இளைய மகள் குஷி கபூர் நடிக்கவிருப்பதாகவும் தகவல் பரவிவருகிறது.

First published:

Tags: Aamir Khan