உலகில் வாழும் ஏராளமான மனிதர்களின் வாழ்க்கையில் பிரச்னையாக இருக்கும் குறட்டையை மையமாக வைத்து 'குட் நைட்' என்ற தமிழ் படத்தை எடுத்துள்ளனர். அந்த திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
மணிகண்டன், ரமேஷ் திலக், மீதா ரகுநாத், இயக்குனர் பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் நடிப்பில், விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'குட் நைட்'. குறட்டை பிரச்னை கொண்ட இளைஞன், ராசி இல்லாதவள் என்று தன்னை நினைக்கும் நாயகி, திருமணமாகியும் குழந்தை இல்லாத தம்பதி, மகனை இழந்த மூத்த ஜோடி இவர்களுக்கு ஏற்படும் நட்பு, உறவு, அவர்கள் சந்திக்கும் பிரச்னை, அவர்களுக்குள் இருக்கும் மகிழ்ச்சி ஆகியவையே 'குட் நைட்'
குறட்டை பிரச்சனை கொண்ட நாயகன் மணிகண்டன், நண்பர்களால் கேலி செய்யப்படுகிறான், காதலி விட்டுவிட்டு சென்று விடுகிறாள். இதனால் தாழ்வு மனப்பான்மையில் சிக்கிக்கொள்கிறான். அப்போது நாயகி மீதா ரகுநாத்தை பார்க்கிறான். அதன் பின் அவன் வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடக்கின்றன. ஆனால் தன் தந்தை, தாய் என பலரின் மரணத்திற்கு காரணம் தன்னுடைய ராசிதான் என நாயகி நினைக்கிறாள். இருந்தாலும் இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். ஆனால் நாயகனின் குறட்டையால் நாயகி தூக்காமல் உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. இதற்கு பிறகு என்ன நடக்கிறது என்பதை சுவாரஸ்யத்துடன் படமாக்கியுள்ளார் இயக்குனர் விநாயக்.
இந்தப் படம் குறட்டை பிரச்னையை மையப்படுத்தி மிக நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ளது. இரு பிரச்னையில் இருக்கும் ஒரு நபரை கிண்டல் செய்வதால், அவர்கள் எந்த அளவிற்கு தாழ்வுமனப்பான்மைக்கு செல்கிறார்கள். அதுவும் அவர்கள் மீது அன்பு செலுத்துபவர்களிடமும் இயல்பாக பழக முடியாமல் தவிக்கின்றனர் என்பதை சொல்லி யோசிக்க வைத்துள்ளனர். அதேபோல் திருமாணவர்களிடம் இந்த சமூகம், விசேஷம் இல்லையா? என்று எழுப்பும் கேள்விக்கு பின்னால் சம்மந்தப்பட்ட தம்பதிக்கு ஏற்படும் மனவலியை காட்சிகளால் கடத்தியுள்ளனர். மேலும் தாய், தந்தையை இழந்தவர்களை நோக்கி வைக்கப்படும் பல கேள்விகளையும், அன்புக்காக தவிக்கும் அவர்களின் உணர்வுகளையும் கட்சிதமாக கட்டமைத்துள்ளனர். இவற்றை சோகத்துடன் படமாக்காமல், ரசிக்க வைக்கும் நகைச்சுவையுடனும், சுவாரஸ்யத்துடனும் படமாக்கி மனதுக்குள் கடத்திவிடுகிறார் இயக்குனர்.
Also read... கஸ்டடி படம் மலையாள படத்தின் காப்பியா? ட்விட்டரில் நறுக் பதிலளித்த வெங்கட் பிரபு!
குட் நைட் படம் 8 கதாபாத்திரங்களை சுற்றியே எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் அந்த கதபாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வு கனக்கச்சிதம். நாயகன் மணிகண்டன் ஒருபுறம் நகைச்சுவை, இன்னொரு புறம் தனக்குள் இருக்கும் பிரச்னை இந்த இரண்டையும் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளார். நாயகியாக வரும் மீதா ரகுநாத், தனக்குள் இருக்கும் சோகத்தையும், அன்புக்காக ஏங்கும் தவிப்பையும் முகத்தில் கொண்டுவந்து படம் முழுக்க தன்வசப்படுத்துகிறார். இவர்களை தவிர இயக்குனர் பாலாஜி சக்தி வேல், ரமேஷ் திலக் உள்ளிட்ட அனைவரும் தங்கள் இயல்பான நடிப்பால் பல இடங்களில் கைதட்டல் வாங்குகின்றனர். குட் நைட் படதிற்கு ஒளிப்பதிவும், ஷேன் ரோல்டனின் பின்னணி இசையும் இனிமை சேர்க்கின்றன.
நகைச்சுவையுடன் நகரும் 'குட் நைட்' படத்தின் இரண்டாம் பாதியில் சில இடங்கள் நீளமாக இருக்கிறதோ என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. ஆனால் இது போன்ற சின்ன சின்ன குறைகளை படத்தின் கிளைமேக்ஸ் தூக்கி சாப்பிட்டு விடுகிறது. படத்தின் இறுதி காட்சியில் திரையரங்கம் சிரிப்பால் நிறைகிறது. மொத்தத்தில் Good Night ஒரு Sweet Dreams.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Movie review