முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் தங்கம் மற்றும் வைர நகைகள் திருட்டு..

பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் தங்கம் மற்றும் வைர நகைகள் திருட்டு..

விஜய் யேசுதாஸ்

விஜய் யேசுதாஸ்

பிரபல பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் 60 பவுன் தங்கம் மற்றும் வைர நகைகள் காணாமல் போனதாக அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை ஆழ்வார்ப்பேட்டை அபிராமபுரம் 3 வது தெரு பகுதியை வசித்து வருகிறார் பாடகர் விஜய் யேசுதாஸ். திரைப்பட பாடகரான இவர் "தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்", மலரே போன்ற பல பாடல்களை பாடி பிரபலம் பெற்றவர். மாரி படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார். பிரபல மூத்த திரைப்பட பாடகர் யேசுதாஸின் மகன் ஆவார்.

இந்த நிலையில் விஜய் யேசுதாஸின் மனைவி தர்சனா வீட்டில் வைத்திருந்த 60 சவரன் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் காணவில்லை என அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆம் தேதி வீட்டின் லாக்கரில் வைத்திருந்த சுமார் 60 சவரன் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் இருந்ததாகவும், கடந்த மாதம் 18ஆம் தேதி நகைகளை எடுக்க சென்ற போது லாக்கரில் வைத்திருந்த நகைகள் காணாமல் போனதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போன நகைகள் குறித்து பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் கடந்த 30ஆம் தேதி (நேற்று) காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் வீட்டில் வேலை செய்யும் மேனகா, பெருமாள், சையத் ஆகியோர்கள் மீது சந்தேகம் இருப்பதாக கூறி பாடகர் விஜயின் மனைவி தர்ஷனா புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக அபிராமபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து கைரேகை நிபுணர்களை அழைத்து சென்று விசாரணை நடத்தி உள்ளனர். மேலும் சந்தேகம் உள்ளதாக கூறப்பட்ட பணியாளர்களை அழைத்து விசாரணை செய்து வருவதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் 200 சவரன் நகைகள் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டு வீட்டின் பணியாளர் மற்றும் கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது திரைப்பட பாடகர் வீட்டில் திருடு போயிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Crime News, Entertainment, Tamil News