முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / “என் மாணவன் மனோபாலா.. ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு..” - பாரதிராஜா இரங்கல்

“என் மாணவன் மனோபாலா.. ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு..” - பாரதிராஜா இரங்கல்

மனோபாலா - பாரதிராஜா

மனோபாலா - பாரதிராஜா

பிரபல நடிகரும், திரைப்பட இயக்குனருமான மனோபாலா உடல்நலக்குறைவால் காலமானார்.

  • Last Updated :
  • Chennai, India

பாரதிராஜா இயக்கத்தில் ‘புதிய வார்ப்புகள்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் மனோபாலா.இவருக்கு வயது 69. ஆகாய கங்கை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகர் மனோபாலா தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் ரஜினிகாந்தை வைத்து 1987யில், ‘ஊர்காவலன்’ என்ற திரைப்படத்தை இயக்கினார்.

கடந்த ஒரு மாத காலமாக மனோபாலாவிற்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதற்காக சிகிச்சை எடுத்து வந்த நிலையில் உடல்நலக்குறைவால்  இன்று காலமானார். மறைந்த நடிகர் மனோபாலாவின் உடல் அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரைத் துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

top videos

    மனோபாலா மறைவுக்கு இயக்குநர் பாரதிராஜா ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது இரங்கலில், “என் மாணவன் மனோபாலா மறைவு எனக்கும் எங்கள் தமிழ் திரை உலகிற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.” எனப் பதிவிட்டுள்ளார்.

    First published:

    Tags: Bharathiraja, Cinema, Tamil News